இவங்க மறந்தும் உளுத்தம் பருப்பு சாப்பிடக்கூடாது? அப்படி சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?

Who should avoid urad dal: பொதுவாக பருப்பு வகைகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். ஆனால், சில பருப்பு வகைகளை சிலர் எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். அதன் படி, யார் உளுத்தம் பருப்பை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இவங்க மறந்தும் உளுத்தம் பருப்பு சாப்பிடக்கூடாது? அப்படி சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?


Side effects of eating urad dal: அன்றாட உணவில் பருப்பு வகைகளைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். இது இது புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக விளங்குகிறது. நம் சமையலறையில் பல வகையான பருப்பு வகைகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், சில பருப்பு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். சில பருப்பு வகைகள், சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம். இந்த வரிசையில் உளுத்தம் பருப்பும் அமைகிறது. உண்மையில் சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்தப் பருப்பை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உளுந்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இவை அதன் சொந்த நன்மைகளைக் கொண்டிருப்பினும், சில சூழ்நிலைகளில் தீங்கு விளைவிக்கலாம்.

இது குறித்து ஜெய்ப்பூர் ஏஞ்சல்கேர்-ஏ ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையத்தின் இயக்குநரான உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் மாதவிடாய் முதல்.. ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் வரை.. உளுந்து லட்டு செய்யும் அற்புதம் இங்கே..

உளுத்தம் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

உளுத்தம் பருப்பு கருப்பு பயறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பயறில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி, இரும்பு, தாமிரம், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது.

இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இது சிலருக்குத் தீங்கு விளைவிக்கலாம். இதில் யார் உளுத்தம் பருப்பை சாப்பிடக்கூடாது அல்லது யாருக்கு உளுத்தம் பருப்பை தீங்கு விளைவிக்கும் என்பதைக் காணலாம்.

உளுத்தம் பருப்பை யார் சாப்பிடக்கூடாது?

காய்கறிகளை விட அதிகமாக பருப்பு வகைகளை சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். உளுத்தம் பருப்பை அதிகம் விரும்புபவராக இருப்பின், அதைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பருப்பு மக்கானியில் பயன்படுத்தப்படும் இந்தப் பருப்பு சுவையானதாகும். ஆனால், இதை உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கலாம்.

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள்

உளுத்தம் பருப்பில் ஆக்சலேட் என்ற தனிமம் காணப்படுகிறது. பொதுவாக உடலில் ஆக்சலேட்டின் அளவு அதிகரிப்பதால் அது சிறுநீரகக் கற்கள் பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே, சிறுநீரக நோயால் (Kidney Disease) பாதிக்கப்பட்ட நபர்கள் கட்டாயம் உளுத்தம் பருப்பை சாப்பிடக் கூடாது. இது அவர்களின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கலாம்.

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள்

பொதுவாக உளுத்தம் பருப்பு செரிமானம் அடைய கடினமாக இருக்கலாம். இதன் காரணமாக செரிமானம், வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு உட்கொள்வது, அவர்களுக்கு வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடும்.

யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள்

உளுந்தம் பருப்பில் பியூரின் உள்ளது. இது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தலாம். இது போன்ற நிலையில், யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உளுத்தம்பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Ulunthu Milk: உளுத்தங்கஞ்சி குடிச்சி போர் அடிச்சிடுச்சா? உளுத்தம்பருப்பு பால் இப்படி செஞ்சி குடிங்க!

ஒவ்வாமை உள்ளவர்கள்

சிலருக்கு உளுத்தம் பருப்பு சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்களே காரணமாகும். இது போன்ற சூழ்நிலையில், அரிப்பு, வீக்கம் அல்லது எரிதல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்கனவே கொண்டிருப்பவர்கள் உளுந்தம் பருப்பை சாப்பிடக்கூடாது.

உளுத்தம் பருப்பின் தீங்கை தவிர்ப்பது எப்படி?

உளுத்தம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளைத் தவிர்க்க சில வழிமுறைகளைக் கையாளலாம்.

  • உளுத்தம்பருப்பை குறைந்தது 5-6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் சமைக்க வேண்டும். இவ்வாறு செய்வது செரிமானம் அடைவதை எளிதாக்குகிறது.
  • அதிகம் உளுத்தம் பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • இரவு நேரங்களில் உளுத்தம் பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • உளுத்தம்பருப்பை சரியாக சமைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.

முடிவு

உளுத்தம் பருப்பில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனினும், இவை அனைவருக்குமே சரியாக இருக்காது. எனவே ஒருவர் நாள்பட்ட நோய் அல்லது செரிமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பின், அவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுகிய பின்னரே இதை உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்து சாப்பிடுவது இவ்வளவு நல்லதா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

Image Source: Freepik

Read Next

உங்க உணவில் கட்டாயம் வேகவைத்த காய்கறிகளை ஏன் சேர்க்கணும் தெரியுமா?

Disclaimer