Who should not take moringa and side effects of consuming moringa leaves: நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் என ஏராளம் உள்ளன. ஆனால், இந்த வரிசையில் மரமும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். முருங்கை மரமானது ஆயுர்வேதத்தில் ஒரு சக்திவாய்ந்த மருத்துவ பண்புகள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இதன் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துமே உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். பொதுவாக, முருங்கையை உட்கொள்வது உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இதன் இலைகள், பழங்கள், விதைகள் மற்றும் நீர் அனைத்தும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல சிறு நோய்கள் முதல் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் வரை குணப்படுத்த உதவுகிறது. ஆனால், சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள், முருங்கை இலைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: சுவை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் முருங்கை இலை பரோட்டா - இப்படி செஞ்சி பாருங்க
இதில் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் முருங்கை இலைகளை யார் உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து விவரித்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
முருங்கை இலைகளை யார் சாப்பிடக்கூடாது?
ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே சர்மா அவர்களின் கூற்றுப்படி, முருங்கை இலைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இதை சில சுகாதார நிலைமைகளில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை ஆரோக்கியத்தில் மேலும் சில மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
குறைந்த எடை உள்ளவர்கள்
ஒருவர் ஏற்கனவே மிகவும் மெலிந்து, எடை அதிகரிக்க முயற்சித்தால் அவர்கள் முருங்கை இலைகளை சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில், முருங்கை இலைகள் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இவை உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
இதன் காரணமாக, உடல் கொழுப்பு மற்றும் தசைகள் விரைவாக உடைக்கத் தொடங்குகிறது. இந்நிலையில், மெல்லிய உடலைக் கொண்டிருப்பவர்கள் முருங்கை இலைகளை சாப்பிடுவது எடையை இன்னும் குறைத்து உடலில் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
முருங்கை இலைகளில் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்நிலையில், ஒருவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பின், அவர்கள் இதை உட்கொள்வது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம்.
ஏனெனில், முருங்கை இலைகள் இரத்த நாளங்களைத் தளர்த்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. எனவே ஒருவருக்கு ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் முருங்கை இலைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் தலைச்சுற்றல், பலவீனம், சோர்வு அல்லது மயக்கம் போன்ற பிரச்சனைகள் எழலாம்.
பலவீனமான செரிமான அமைப்பு
வாயு, வீக்கம், மலச்சிக்கல், அடிக்கடி வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி அதாவது போன்ற எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பிரச்சனை உள்ளவர்கள் முருங்கை இலைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இலைகள் ஆன்டெல்மிண்டிக் ஆகும்.
அதாவது இவை குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. முருங்கையில் உள்ள இந்த பண்புகள் சாதாரண செரிமான செயல்பாட்டில் தடையை ஏற்படுத்தி செரிமானத்தை மிகவும் கடினமாக்கலாம். இதன் காரணமாக ஒருவருக்கு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவை மேலும் அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: உங்களிடம் வைட்டமின் பி12 குறைவாக உள்ளதா? இந்த வழிகளில் உங்கள் உணவில் முருங்கை கீரையை சேருங்கள்..
தைராய்டு நோயாளிகள்
தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் முருங்கை இலைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை தைராய்டு அளவை மேலும் குறைக்கலாம்.
இது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. முருங்கை இலைகளின் கூறுகள் தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை பாதிப்பதால், அவர்களுக்கு தைராய்டின் அறிகுறிகள் அதிகமாக வெளிப்படத் தோன்றும்.
கர்ப்பிணிப் பெண்கள்
பொதுவாக முருங்கை இலைகளில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளன. ஆனால், கர்ப்ப காலத்தில் மருத்துவரை அணுகாமல் இதை சாப்பிடக்கூடாது. உண்மையில், முருங்கையின் வேர்கள் அல்லது விதைகளில் கருக்கலைப்பு கூறுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும், இலைகள் இவற்றை விட பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், கர்ப்பிணி பெண்ணின் வயிறு ஏற்கனவே உணர்திறன் கொண்டதாக இருப்பின், அதை உட்கொள்வது வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது கருப்பையில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
முடிவுரை
சில உடல்நலப் பிரச்சினைகளில் முருங்கை அல்லது முருங்கை இலைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். முருங்கை ஆயுர்வேதத்தில் எவ்வளவு நன்மைகளைக் கொண்டிருப்பினும், மேலே கூறப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் முருங்கை இலைகளை சாப்பிடக் கூடாது. ஏனெனில், இது உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் முருங்கைப் பொடி சாப்பிடுவது நல்லதா? அதை எப்படி எடுத்துக் கொள்வது? மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ
Image Source: Freepik