தினமும் முருங்கைப் பொடி சாப்பிடுவது நல்லதா? அதை எப்படி எடுத்துக் கொள்வது? மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ

Can we take moringa powder daily: தினந்தோறும் முருங்கைப் பொடி எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதில் எல்லோருக்கும் சந்தேகம் எழும். தினமும் மொரிங்கா பொடியை சாப்பிடுவது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
தினமும் முருங்கைப் பொடி சாப்பிடுவது நல்லதா? அதை எப்படி எடுத்துக் கொள்வது? மருத்துவர் தரும் குறிப்புகள் இதோ

Benefits of taking moringa powder daily: அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமானதாகும். அவ்வாறு நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்றாக முருங்கை அமைகிறது. அதன் படி, முருங்கையிலிருந்து பெறப்படக்கூடிய முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கைப் பூ உள்ளிட்ட அனைத்துமே பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாகும். எனவே தான் முருங்கையானது சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலானோர் முருங்கைக்காயை காய்கறியாகப் பயன்படுத்துகிறார்கள். பழங்காலத்திலிருந்தே, முருங்கையின் இலைகள் பல கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த முருங்கை இலையை அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். அதில் ஒன்றாக முருங்கை இலைப் பொடி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது ஆரஞ்சு பழத்தை விட பல மடங்கு அளவிலான வைட்டமின்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், முருங்கைப் பொடியில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பல வகையான தாதுக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. இதன் நன்மைகளைக் கருதியே முருங்கை இலைப் பொடியானது தற்போது சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால், இதை முறையாக உட்கொள்ளாததன் காரணமாக பல பக்க விளைவுகள் ஏற்படலாம். தினமும் முருங்கைப் பொடியை உட்கொள்ளலாமா வேண்டாமா என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு ஸ்பூன் மொரிங்கா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா? 

முருங்கைப் பொடியை தினமும் உட்கொள்ளலாமா?

முருங்கைப் பொடி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். இதில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், புரதங்கள், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் காணப்படுகிறது. இது ஆயுர்வேத மற்றும் ஆங்கில மருந்துகளைத் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலுக்குப் உடலுக்கு போதுமான அளவு புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

அதே சமயம், இதை தினமும் உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்குமா? அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழக்கூடியதாக அமைகிறது. இது குறித்து, ஆரோக்கிய சுகாதார மையத்தின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி. திரிபாதி அவர்கள்,”முருங்கைப் பொடியை சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும், ஆனால் அதை உட்கொள்வதற்கு முன், எவ்வளவு சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர் அல்லது நிபுணரை அணுக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி, தினமும் 30 முதல் 50 கிராம் முருங்கைப் பொடியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை விட அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Moringa recipes for weight loss: எகிறும் தொப்பைக் கொழுப்பை வேகவேகமாக குறைக்க உதவும் 3 சூப்பர் மொரிங்கா ரெசிபிஸ் இதோ!

முருங்கைப் பொடியை எப்படி சாப்பிடுவது?

  • முருங்கைக்காய் அல்லது முருங்கைப் பொடியை அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்ற பிறகு மொரிங்கா பவுடரை காலையில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம்.
  • இது தவிர, முருங்கை இலைகளின் கஷாயம் அல்லது தேநீராக தயார் செய்து குடிக்கலாம்.
  • பலர் முருங்கைப் பொடியை மாத்திரை வடிவத்திலும் பயன்படுத்துகின்றனர்.
  • மேலும், முருங்கைப் பொடியை சூப்பில் அல்லது ஸ்மூத்தியில் சேர்த்து உட்கொள்ளலாம்.

முருங்கை இலைகளை உலர்த்துவதன் மூலம் முருங்கைப் பொடியானது தயார் செய்யப்படுகிறது. இதில் புரதங்கள், வைட்டமின்கள் உட்பட பல வகையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. இதனை உட்கொள்வது உடலை உற்சாகமாக வைத்திருக்கவும், தசையை வளர்க்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.

குறிப்பு

முருங்கைப் பொடி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், சில தீங்கு விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதன் படி, கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் முருங்கைப் பொடி தீங்கு விளைவிக்கலாம். இதை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் பல கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எந்தவொரு நோய் அல்லது பிரச்சனை இருப்பினும் முருங்கைப் பொடியை உட்கொள்வதற்கு முன்னதாக, ஒரு மருத்துவர் அல்லது ஆயுர்வேத நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: இனி கடையில வாங்காதீங்க.. வீட்டிலேயே எளிமையா முருங்கைப்பொடி செய்யலாம்..

Image Source: Freepik

Read Next

தினமும் எலுமிச்சை நீரில் சியா விதை கலந்து குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா.?

Disclaimer