Moringa recipes for weight loss: எகிறும் தொப்பைக் கொழுப்பை வேகவேகமாக குறைக்க உதவும் 3 சூப்பர் மொரிங்கா ரெசிபிஸ் இதோ!

How to make moringa recipes for weight loss: உடல் எடையைக் குறைப்பதில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எடையைக் குறைக்க டாக்டர் தரும் சூப்பர் மொரிங்கா ரெசிபிகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Moringa recipes for weight loss: எகிறும் தொப்பைக் கொழுப்பை வேகவேகமாக குறைக்க உதவும் 3 சூப்பர் மொரிங்கா ரெசிபிஸ் இதோ!

How to use moringa for flat tummy: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

அவ்வாறு உடல் எடையைக் குறைப்பதில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கையானது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியைக் குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. இது தவிர முருங்கையானது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு முருங்கையை பல்வேறு ரெசிபியாக தயார் செய்யலாம். இதில் உடல் எடையிழப்பு மற்றும் ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு முருங்கையை எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து டாக்டர் ஹன்சாஜி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Murungai Kai Chapati: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை காய் சப்பாத்தி செய்முறை!!

உடல் எடை குறைய முருங்கை ரெசிபிகள்

முருங்கைக்காய் எப்போதும் ஒரு சூப்பர் உணவாக மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய உணவில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதில் எடையிழப்புக்கு ஹன்சாஜி அவர்கள் கூறிய மூன்று முக்கிய முருங்கை ரெசிபிகள் குறித்து காணலாம்.

முருங்கை இலை ரொட்டி ரெசிபி

தேவையானவை

  • முழு கோதுமை மாவு - அரை கப்
  • புதிய முருங்கை இலைகள் - 1/4 கப் (கழுவி நறுக்கியது)
  • சீரக விதைகள் - 1/4 டீஸ்பூன்
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  • ஒரு சிட்டிகை உப்பு
  • தண்ணீர் - தேவையான அளவு

முருங்கை இலை ரொட்டி செய்யும் முறை

  • முதலில் ஒரு கிண்ணத்தில் முழு கோதுமை மாவு, புதிய முருங்கை இலைகள், மஞ்சள் தூள், சீரகம், உப்பு போன்ற அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும்.
  • இதில் படிப்படியாக தண்ணீரைச் சேர்த்து மென்மையாக மாசை பிசைந்து கொள்ள வேண்டும். இதை ஈரமான துணியைக் கொண்டு மூடி 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கலாம்.
  • மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து தட்டி ரொட்டியைத் தயார் செய்யலாம்.
  • இந்த முருங்கை இலை ரொட்டியை புதிய தயிர் அல்லது ஒரு எளிய காய்கறி கறியுடன் பரிமாறலாம்.

இந்த ரொட்டியில் சேர்க்கப்படும் முருங்கை இலையானது நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இது உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. மேலும் சீரகம் செரிமானத்தை மேம்படுத்தவும், மஞ்சள் அழற்சி எதிர்ப்புச் சக்தி நிறைந்ததாகும். இவை அனைத்துமே உடல் எடையைக் குறைப்பதில் பங்கு வகிக்கிறது.

முருங்கை இலைப் பொடி மூலிகை தேநீர்

தேவையானவை

  • முருங்கைப் பொடி - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - 2 கப்
  • புதிய இஞ்சி - சிறிய துண்டு
  • வெந்தய விதைகள் - 1/4 டீஸ்பூன்
  • ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடி (விரும்பினால்)
  • எலுமிச்சை சாறு - சில துளிகள் (விரும்பினால்)

இந்த பதிவும் உதவலாம்: Moringa leaves: உணவில் முருங்கைகீரையை கட்டாயம் சேர்த்துக்கோங்க.! ஏன் தெரியுமா ?

முருங்கை இலை தேநீர் செய்முறை

  • முதலில் இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை நீரில் சேர்த்து அதை 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அடுப்பிலிருந்து நீக்கி முருங்கைப் பொடி சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் ஊறவைக்கலாம்.
  • அதன் பிறகு, இந்த தேநீரை வடிகட்டி விரும்பினால் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.

இந்த இனிமையான மூலிகை தேநீர் நச்சு நீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக இதில் இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் சேர்க்கப்படுகிறது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இதில் இலவங்கப்பட்டை அல்லது எலுமிச்சையைச் சேர்ப்பது இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், கொழுப்பு எரிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.

முருங்கைக்காய் ரசம்

தேவையானவை

  • முருங்கைக்காய் - 4 முதல் 5 (3 அங்குல துண்டுகளாக வெட்டியது)
  • புளி - ஒரு சிறிய துண்டு (ஊறவைத்து வடிகட்டவும்)
  • சீரக விதைகள் - ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • ஒரு சிட்டிகை கருப்பு மிளகு
  • நெய் - ஒரு டீஸ்பூன்
  • தண்ணீர் - நான்கு கப்
  • உப்பு - தேவையான அளவு

இந்த பதிவும் உதவலாம்: Drumstick leaves benefits: தினமும் இந்த இலை சாப்பிட்டா எல்லா பிரச்சனையும் பறந்து போகும்

முருங்கைக்காய் ரசம் செய்வது எப்படி?

  • தண்ணீரில் முருங்கைக்காய்கள், மஞ்சள், உப்பு போன்றவற்றைச் சேர்த்து மென்மையாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதிகம் கொதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை உடைந்து போகலாம்.
  • பிறகு பாத்திரம் ஒன்றில் நெய் சேர்த்து அதில் சீரகம் மற்றும் கருப்பு மிளகு சேர்க்க வேண்டும். இதனைத் தொடர்ந்து புளித்தண்ணீர் கலக்க வேண்டும்.
  • அதன் பின்னர் வேகவைத்த முருங்கைக் காயைச் சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
  • இப்போது சூடான, சுவையான முருங்கை ரசம் தயாராகி விட்டது.

முருங்கைக்காயில் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் புளி கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இதில் கருப்பு மிளகு சேர்த்து செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. 

இந்த மூன்று முருங்கை ரெசிபிகளும் எடை இழப்புக்கான சிறந்த தேர்வாகும். இதன் நார்ச்சத்து நீண்ட நேரம் உங்களை முழுமையாக உணர வைக்கிறது. இவை பசியை அடக்கவும், உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவுகிறது. முருங்கையில் கலோரிகளும் குறைவாக இருப்பதால் இவை எடை இழப்புக்கு ஒரு நல்ல கூடுதலாகும். சிறந்த முடிவுக்கு உடற்பயிற்சி மற்றும் சீரான வாழ்க்கை முறையுடன் இதைச் சேர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Moringa for diabetes: எகிறும் சுகர் லெவலை டக்குனு குறைக்க முருங்கையை இப்படி எடுத்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

குறைவாக சாப்பிட்டும் எடை குறையவில்லையா? உடற்பயிற்சி செய்தும் பலன் இல்லையா? இதை பண்ணுங்க!

Disclaimer