Thu Oct 29, 2026 | 10:48 AM IST

Murungai Kai Chapati: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை காய் சப்பாத்தி செய்முறை!!

உடலில் உள்ள பல பிரச்சினைகளை தீர்க்கும் முருங்கை காய் சப்பாத்தி. செய்முறை மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Murungai Kai Chapati: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை காய் சப்பாத்தி செய்முறை!!Murungai Kai Chapati: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை காய் சப்பாத்தி செய்முறை!!

What are the benefits of moringa paratha: முருங்கைக்காய், இது மோரிங்கா என்றும் அழைக்கப்படுகிறது. நீண்டு காணப்படும் இந்த காய் உடலுக்கு பல நன்மைகளை வலனாகுகிறது. இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது மற்றும் காய்கறிகள் மற்றும் சூப்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. முருங்கைக்காயில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஃபோலேட், கால்சியம், இரும்பு, துத்தநாகம், சோடியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள பல பிரச்சனைகள் நீங்குவதுடன் பல நோய்கள் வராமல் தடுக்கிறது. இந்தியாவைத் தவிர, பிலிப்பைன்ஸ், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி, கே மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இதன் இலைகளில் காணப்படுகின்றன. அவை பார்வையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். முருங்கைகாயை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Chettinad Thakkali Kurma: இட்லி, தோசைக்கு ஏற்ற செட்டிநாடு தக்காளி குருமா செய்முறை! 

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 2
கோதுமை மாவு - 2 கப் (250 மி.லி)
துருவிய இஞ்சி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் -1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - சிறிது.

முருங்கைக்காய் சப்பாத்தி செய்முறை:

Moringa Leaves Recipe | Moringa weight loss Roti | Drumstick Leaves  Chapati| Healthy Moringa RecipesMoringa Leaves Recipe | Moringa weight loss Roti | Drumstick Leaves Chapati| Healthy Moringa Recipes

  • முருங்கைக்காய் சப்பாத்தி செய்ய முதலில், முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
  • முருங்கைக்காய் நன்கு வெந்தவுடன் அதை நன்கு மசித்து தனியே ஒரு கிண்ணத்தில் வடிகட்டி வைக்கவும்.
  • இப்போது, கோதுமை மாவை, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், உப்பு, ஓமம், எண்ணெய், முருங்கை இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இலைகளை நறுக்கி மாவுடன் சேர்த்தும் கலக்கலாம். படிப்படியாக முருங்கைக்காய் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி, மாவை கலக்க ஆரம்பிக்கவும்.
  • மாவு தயாரானதும், கிண்ணத்தை மூடி, 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • 10 நிமிடங்களுக்குப் பிறகு, மாவை சம அளவு உருண்டைகளாகப் பிரிக்கவும்.
  • உருண்டையில் மாவு தூவி, சப்பாத்திகளை மெதுவாகவும் சமமாகவும் உருட்டத் தொடங்குங்கள்.
  • அனைத்து மாவு உருண்டைகளையும் இந்த முறையில் உருட்டவும். அடுப்பில் ஒரு தவாவை வைக்கவும், அது சூடானதும், சப்பாத்திகளை வைத்து ஒரு பக்கம் வேக விடவும்.
  • வெந்ததும், மறுபுறம் திருப்பி நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும்.
  • இருபுறமும் வெந்ததும் தவாவில் இருந்து இறக்கவும். இந்த முருங்கைக்காய் சப்பாத்தியை கொஞ்சம் ஊறுகாய் மற்றும் தயிருடன் சூடாக பரிமாறவும்.

இந்த பதிவும் உதவலாம்: Curd Idli: தயிர் வடை சாப்பிட்டிருப்பீங்க... எப்போவாது தயிர் இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? இதோ ரெசிபி!

முருங்கைக்காய் சப்பாத்தி சாப்பிடுவதன் நன்மைகள்:

Moringa Parathas – Drumstick Leaves Parathas – My Peppermint KitchenMoringa Parathas – Drumstick Leaves Parathas – My Peppermint Kitchen

  • வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புரதம் மற்றும் கால்சியம் ஆகியவை முருங்கைக்காயில் ஏராளமாக உள்ளன.
  • முருங்கைக்காய் சாப்பிடுவதால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • முருங்கைக்காய் உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
  • முருங்கைக்காயில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • முருங்கை கீரை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும்.
  • வாழைப்பழத்தை விட பல மடங்கு பொட்டாசியம், கேரட்டை விட பல மடங்கு வைட்டமின் ஏ, பாலை விட கால்சியம், தயிரை விட இரண்டு மடங்கு புரதம் முருங்கையில் உள்ளது.
  • முருங்கைக்காயை உட்கொள்வதால் சுளுக்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • முருங்கைக்காய் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்த முருங்கை உதவுகிறது.
  • முருங்கை, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Brinjal Fry Recipe: சிக்கன் வறுவலை மிஞ்சும் செட்டிநாடு நீட்டு கத்திரிக்காய் வறுவல்.. இதோ ரெசிபி!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.