Chettinad Special Tomato Kurma recipe in Tamil: பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, உப்புமா மற்றும் பொங்கல் தான் இருக்கும். இந்நிலையில், நாம் இட்லி தோசைக்கு வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் சாம்பார் வைத்து நம்மில் பலருக்கும் சலித்து போயிருக்கும். சமைத்த நமக்கும் சரி… சாப்பிடும் குழந்தைகளுக்கும் சரி… ஒரே சட்னியை சாப்பிட்டு போர் அடித்திருக்கும்.
இட்லி, தோசைக்கு ஏற்ற ஏதாவது புதிதாக ஏதாவது சமைக்க யோசிப்பவராக நீங்க இருந்தால், இது உங்களுக்கான பதிவு. ஏனென்றால், செட்டிநாடு ஸ்டைல் தக்காளி குருமா எப்படி செய்வது என உங்களுக்கு கூறுகிறோம். இந்த குருமா மட்டும் செய்து கொடுங்க, வீட்டில் உள்ளவங்க 10 இட்லி கூட அசால்ட்டா சாப்பிடுவாங்க. இதோ உங்களுக்கான ரெசிபி.
இந்த பதிவும் உதவலாம்: Kalathappam Recipe: கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம் எப்படி செய்யணும் தெரியுமா?
தேவையான பொருட்கள்
தக்காளி – 10 (சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும் அல்லது அரைத்துக்கொள்ளவேண்டும்)
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
முந்திரிப் பருப்பு – 8
பூண்டு – 4 பல்
சோம்பு – அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
கசகசா – ஒரு ஸ்பூன்
பட்டை – 1
கடுகு – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
செட்டிநாடு தக்காளி குருமா செய்முறை:
- முதலில், தேங்காய்த் துருவலில், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய், பூண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
- இப்போது கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, கறிவேப்பிலை தாளித்து எஞ்சிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவேண்டும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இவை நன்றாக மசிந்து வதங்கும் வரை வதக்கவேண்டும்.
- வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
- இப்போது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும். கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், செட்நாடு தக்காளி குருமா தயார்.
செட்டிநாடு தக்காளி குருமா நன்மைகள்:
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: தக்காளியில் வைட்டமின்கள் C, K, A, B1, B3, B5, B6, B7, அத்துடன் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், ஃபோலேட், இரும்பு, குரோமியம், கோலின், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: தக்காளியில் லைகோபீன் மற்றும் நரிங்கெனின் உள்ளன, இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
இதய ஆரோக்கியம்: தக்காளி இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் இதய செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவும். தக்காளியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய்களைத் தடுக்கும்.
தோல், முடி மற்றும் கண்கள்: தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, பளபளப்பான, வலிமையான முடியைப் பராமரிக்கவும், குருட்டுத்தன்மையைத் தடுக்கவும் உதவும். தக்காளி தோல் அமைப்பை வளப்படுத்தவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Curd Idli: தயிர் வடை சாப்பிட்டிருப்பீங்க... எப்போவாது தயிர் இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? இதோ ரெசிபி!
செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம்: தக்காளி செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
டிமென்ஷியா: தக்காளி டிமென்ஷியாவிலிருந்து பாதுகாக்க உதவும்.
புரோஸ்டேட் புற்றுநோய்: சமைத்த தக்காளி புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
இரத்த சர்க்கரை: தக்காளி இரத்த சர்க்கரையை சமப்படுத்த உதவும்.
Pic Courtesy: Freepik