How To Make Thanjavur Special tomato chutney: பெரும்பாலும் பல வீடுகளில் இட்லி, தோசை, பூரி, உப்புமா மற்றும் பொங்கல் தான் காலை உணவாக இருக்கும். பெரும்பாலும் நாம் இட்லி தோசைக்கு வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் சாம்பார் வைத்து நம்மில் பலருக்கும் சலித்து போயிருக்கும். சமைத்த நமக்கும் சரி… சாப்பிடுபவர்களுக்கும் சரி… ஒரே சட்னியை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். இட்லி, தோசைக்கு புதிதாக ஏதாவது சட்னி செய்ய யோசிப்பவராக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கான பதிவு.
ஏனென்றால், தஞ்சாவூர் தக்காளி சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம். குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. எளிமையான முறையில் தயார் செய்யப்படும் தஞ்சாவூர் தக்காளி சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது கண்டிப்பாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Ulavacharu Chicken Biryani: சுஜிதா செய்து அசத்திய உலவச்சாறு சிக்கன் பிரியாணி ரெசிபி..
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி - 5.
மிளகாய் வத்தல் - 3.
புளி - சிறிய துண்டு.
உப்பு - தேவையான அளவு.
கடுகு - 1 ஸ்பூன்.
வெந்தயம் - 1 ஸ்பூன்.
சீரகம் - 1 ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.
கறிவேப்பிலை - சிறிது.
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
- முதலில், தக்காளியை காய்ந்த மிளகாய் மற்றும் புளியுடன் சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
- பின்னர், வேகவைத்த தக்காளியை நன்றாக மிக்சியில் உதவியுடன் அரைக்கவும்.
- இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சூடானதும், அதில் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து நன்கு ட்ரை ரோஸ்ட் செய்யவும்.
- இதை இப்போது ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி நன்கு அரைத்து எடுக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Nattu Kozhi Getti Kulambu: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நாட்டு கோழி கெட்டி குழம்பு..
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும் அதில், கடுகு, சீரகம், உளுந்து சேர்த்து பெரிய விடவும்.
- பின்னர், அதில் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
- பின், அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து நன்கு கிண்டவும்.
- கடைசியாக சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும்.
- இது இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்துடனும் பரிமாறலாம்.
Pic Courtesy: Freepik