Madurai Thanni Chutney Recipe in Tamil: பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, உப்புமா மற்றும் பொங்கல் தான் இருக்கும். நாம் இட்லி தோசைக்கு பெரும்பாலும் வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி மற்றும் சாம்பார் செய்து நம்மில் பலருக்கு சலித்து போயிருக்கும். சமைத்த நமக்கும் சரி… சாப்பிடும் குழந்தைகளுக்கும் சரி… ஒரே சட்னியை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். இட்லி, தோசைக்கு ஏற்ற ஏதாவது புதிய சட்னி செய்ய யோசிப்பவராக நீங்க இருந்தால், இது உங்களுக்கான பதிவு.
ஏனென்றால், இந்த முறை தேங்காய் இல்லாமல், அட்டகாசமான சுவையில் மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் நாங்கள் கூறுகிறோம். குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் இந்த சட்னி. இது கண்டிப்பாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கும். வாருங்கள் மதுரை தண்ணி சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Chettinad Thakkali Kurma: இட்லி, தோசைக்கு ஏற்ற செட்டிநாடு தக்காளி குருமா செய்முறை!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
பூண்டு - 5 பற்கள்
பச்சை மிளகாய் - 10 கீறியது
பொட்டு கடலை - 1/2 கப்
கல்லுப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
அரைத்த சட்னி
மதுரை தண்ணி சட்னி செய்முறை:
- ஒரு பானில் எண்ணெய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் பொட்டு கடலை, கல்லுப்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
- ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உளுந்து, கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின்பு அரைத்த சட்னி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டால், சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்.
தண்ணி சட்னி நன்மைகள்:
செரிமானம்: சட்னியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவும்.
நோயெதிர்ப்பு அமைப்பு: சட்னிகள் வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
கண் ஆரோக்கியம்: கேரட் சட்னி போன்ற சில சட்னிகளில் கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமான கரோட்டினாய்டுகள் உள்ளன.
கொழுப்பு: சட்னி எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.
இரத்த சர்க்கரை: கொத்தமல்லி சட்னி இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Chicken Rasam: சளி, இருமலை குணமாக்கும் கோழி ரசம்.. எப்படி செய்வது?
எடை மேலாண்மை: சட்னிகள் குறைந்த கலோரி மற்றும் அதிக சுவையுடன் இருக்கும். இது எடை மேலாண்மைக்கு உதவும்.
குமட்டல்: சட்னியில் உள்ள இஞ்சி, குறிப்பாக கர்ப்ப காலத்தில் வயிற்றைக் குறைக்க உதவும்.
வீக்கம்: புதினா சட்னி வீக்கத்தைக் குறைக்க உதவும்.
Pic Courtesy: Freepik