How to make tasty Idli Podi Recipe at Home: என்னதான் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என வைத்ததைத்தாலும் இட்லி பொடியின் சுவையை எதாலும் ஈடு செய்யவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. சுட சுட 2 இட்லியை தட்டில் வைத்து. அதன் மீது காரசாரமான இட்லி பொடியை மழை சாரல் போல தூவி, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அப்படியே எடுத்து சாப்ப்பிட்டால்….. அட அட அதன் சுவையை நினைக்கும் போதே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊரும்.
சமைக்க அதிக நேரம் இல்லாதநிலையில் நமக்கு உதவும் இட்லி பொடி எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது பிரபல முருகன் இட்லி கடை பொடியை விட அற்புதமாக இருக்கும். வாருங்க காரசாரமாக ஹோட்டல் ஸ்டைல் இட்லி பொடி எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Onion Tamarind Rice: வெறும் வெங்காயம் இருந்தா போதும்; ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி தயார்!
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் - 2 ½ ஸ்பூன்.
கடலை பருப்பு - 1/2 கப்.
உளுத்தம் பருப்பு - 1/4 கப்.
வேர்க்கடலை - 1/4 கப்.
பொட்டு கடலை - 1/4 கப்.
குண்டூர் சிவப்பு மிளகாய் - 10.
காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 10.
துருவிய தேங்காய் - 1 கப்.
பூண்டு - 4 பல்.
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு.
கல் உப்பு - 1 1/2 ஸ்பூன்.
பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்.
சர்க்கரை - 1 ஸ்பூன்.
செய்முறை :

- ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
- பின்னர் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பொட்டு கடலை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்பு அதை ஆறவிடவும். அதே பானில் நல்லெண்ணெய் ஊற்றி, குண்டூர் சிவப்பு மிளகாய், காஷ்மீரி சிவப்பு மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
- மீண்டும் அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, துருவிய தேங்காய், பூண்டு மற்றும் புளியை சேர்த்து சேர்த்து வறுக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : நாவில் எச்சில் ஊறும் சுவையில் அரேபியன் கோதுமை புட்டிங் ரெசிபி!
- வறுத்த மிளகாயை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும். பின்னர், வறுத்த பருப்பு, வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்.
- கடைசியாக வறுத்த தேங்காய், பூண்டு, புளி மற்றும் கல் உப்பு, பெருங்காய தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்தால் சுவையான இட்லி பொடி தயார். சூடான இட்லியுடன் பரிமாறவும்.
இட்லி பொடியின் நன்மைகள்

இட்லி பொடி சத்தான சைவ உணவு மற்றும் எளிமையாக சமைக்க கூடியது. இதில், மிளகாய் தூள், அரிசி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கடுகு, எள் விதைகள் உள்ளது.
உளுத்தம்பருப்பு மற்றும்நிலக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. கடுகு விதைகளில் அதிகப்படியான மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம் : Pudina Kulambu Recipe: புதினா சட்னி செஞ்சி போர் அடிக்குதா? புதினா குழம்பு இப்படி செஞ்சி சாப்பிடுங்க
எள் விதைகளில் அதிக அளவு கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து, ஊட்டச்சத்து நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
மிளகாய்ப் பொடியில் கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றுடன் கொழுப்பை எரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
Pic Courtesy: Freepik