Spicy Milagai chutney: கார சாரமான ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் சட்னி செய்முறை!

  • SHARE
  • FOLLOW
Spicy Milagai chutney: கார சாரமான ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் சட்னி செய்முறை!

இட்லி, தோசை, வெள்ளை சாதம் என அனைத்து விதமான உணவுக்கும் ஏற்ற ஒரு புதிய சட்னி ரெசிபியை நீங்கள் தேடுபவராக இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்கானது. இன்று நாங்கள் உங்களுக்கு காரசாரமான ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் சட்னி செய்வது எப்படி என கூறுகிறோம். ஆந்திரா என்றாலே காரத்திற்கு பெயர் பெற்றது. உங்கள் குடும்பத்தினருக்கு காரம் பிடிக்கும் என்றால் இந்த முறை இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க. பத்து இட்லியை கூட வீட்டில் உள்ளவர்கள் கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Ennai Kathirikai Kulambu: நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா?

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் - 6.
புளி - எலுமிச்சை பழம் அளவு.
வர மல்லி – 1 ஸ்பூன்.
சீரகம் – 1/2 ஸ்பூன்.
தக்காளி பழம் – 1.
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
வேர்க்கடலை – 4 ஸ்பூன்.
உப்பு - சிறிது.
நல்லெண்ணெய் - தேவையான அளவு.

ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் சட்னி செய்முறை :

  • இதற்கு முதலில், துவையல் செய்ய எடுத்துக்கொண்ட தக்காளி பழத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து எலுமிச்சை பழ அளவிற்கு புளி சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்துக்கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம் : Dal Dhokli: பாரம்பரிய குஜராத்தி தால் தோக்லி… இப்படி செஞ்சி பாருங்க…

  • இதையடுத்து, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கடாயில் எண்ணெய் சேர்க்காமல் 4 ஸ்பூன் வேர்கடலையினை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  • வேர்க்கடலை ஆறியதும் அதன் தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.
  • இனி, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் இதில் காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  • பின்னர், இதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • தொடர்ந்து இதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் வர மல்லி, சீரகம், நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  • பின், இந்த சேர்மத்தையும் மிளகாய் உள்ள மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம் : Chicken 65 Recipe: நடிகர் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் 56 செய்வது எப்படி?

  • இதையடுத்து, அதில் வறுத்து வைத்த வேர்கடலை சேர்த்து அரைக்கவும். சேர்மங்கள் நன்கு பொடியானதும் இதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்தால் மிளகாய் துவையல் ரெடி.

இந்த கார சாரமான துவையலை தோசை, இட்லி அல்லது சாம்பார் சாதத்துடன் ஒரு கிண்ணத்தில் வைத்து சாப்பிட்டால், அடடா…. படிக்கும் போதே பாதி பேருக்கு நாவில் எச்சில் ஊறியிருக்கும். அதிக காரமாக இருந்தால் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Dal Dhokli: பாரம்பரிய குஜராத்தி தால் தோக்லி… இப்படி செஞ்சி பாருங்க…

Disclaimer