How to make Chettinad Pepper Chicken Masala: ஞாயிற்று கிழமை என்றாலே தெரு மொத்தமும் சிக்கன் அல்லது மட்டன் வாசனை மூக்கத்தை துளைக்கும். ஆனால், நாம் பெரும்பாலும் சிக்கன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் பிரியாணி என ஒரே மாதாரியாக சமைத்து சலிப்படைந்திருப்போம். ஏதாவது, புதுமையாகவும் சுவையாகவும் செய்ய விரும்பினால் இந்த வாரம் சிக்கனை இப்படி செய்து பாருங்கள்.
ஆந்திரா உணவு என்ற பெயரை கேட்டாலே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊரும். ஏனென்றால், உலகம் முழுவதும் ஆந்திரா சமையலுக்கு அவ்வளவு தனிச்சிறப்பு உண்டு. இது காரமான மற்றும் சுவையான உணவு ஆகும். அந்தவகையில், சிக்கன் வைத்து ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Murungakkai Kuzhambu: ஒரு முறை முருங்கைக்காய் குழம்பை இப்படி வையுங்க சுவை அள்ளும்!!
தேவையான பொருட்கள்:
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் - 1 கிலோ
உப்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயத்தின் விழுது - 2 எண்
வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
கிரீன் சில்லி சிக்கன் செய்ய
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - சிறிது
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - 1 சிறிய கட்டு
பச்சைமிளகாய் - 1
உப்பு - 1 தேக்கரண்டி
ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் செய்முறை:
- பாத்திரத்தில் சிக்கன், உப்பு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், வெங்காய விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்பு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
- மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்பு அரைத்த மசாலாவை சிக்கனில் சேர்த்து கலந்து தண்ணி வற்றி வரும் வரை வேகவிடவும்.
- கடைசியாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்தால் ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் தயார்!
கிரீன் சில்லி சிக்கன் சாப்பிடுவதன் நன்மைகள்
இருதய ஆரோக்கியம்
பச்சை மிளகாயின் வீரியத்தை அளிக்கும் கேப்சைசின் என்ற கலவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
செரிமானம்
பச்சை மிளகாய் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். அவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன. அவை செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பச்சை மிளகாயில் வைட்டமின் சி உள்ளது. இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானது.
வளர்சிதை மாற்றம்
பச்சை மிளகாயின் வெப்பம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகளை எரிப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Spanish Omelet Recipe: பத்து நிமிஷம் போதும் காலை உணவுக்கு ஸ்பானிஷ் ஆம்லெட் ரெடி!!
அழற்சி
கேப்சைசின் அழற்சி செயல்முறைகளுடன் இணைக்கப்பட்ட நியூரோபெப்டைட் என்ற பொருளைத் தடுப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
பச்சை மிளகாயில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்கும் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. சுருக்கங்கள், கறைகள், பருக்கள், தடிப்புகள் மற்றும் முகப்பரு போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பைட்டோநியூட்ரியன்ட்களும் அவற்றில் உள்ளன.
மனநிலை
காரமான உணவுகள் எண்டோர்பின்கள் மற்றும் டோபமைனை வெளியிடுகின்றன. இது மனநிலையை மேம்படுத்த உதவும். மனதை புத்துணர்ச்சியுடனும் நேர்மறையாகவும் வைத்திருக்க உதவும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகளும் கேப்சைசினில் உள்ளன.
இருப்பினும், பச்சை மிளகாய் செரிமான எரிச்சல் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். பச்சை மிளகாயை மிதமாக சாப்பிடுவது மற்றும் உங்கள் உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கவனிப்பது முக்கியம்.
Pic Courtesy: Freepik