Andhra Style Chicken Fry In Tamil: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம். எப்பவும் ஒரே மாதரி சிக்கன் ப்ரை செய்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை செய்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும். வாருங்கள் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வாழைக்காய் மசாலா சாதம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் - 1 கிலோ
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
மசாலா தூள் அரைக்க
தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பட்டை - 2
காய்ந்த மிளகாய் - 6
காஷ்மீரி மிளகாய் - 4
சிக்கன் ப்ரை செய்ய
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2 முழு தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள்
உப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை செய்முறை:
- சிக்கனில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
- கடாயில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- பின்பு நன்கு ஆறவிட்டு பிறகு பொடியாக அரைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்பு கறிவேப்பிலை மற்றும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- அடுத்து அரைத்த மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- பின்பு மீதம் உள்ள மசாலா தூளை சேர்த்து கிளறவும்.
- பிறகு உப்பு சேர்த்து கலந்து குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.
- கடைசியாக கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து ஆந்திர ஸ்டைல் சிக்கன் ப்ரை தயார்!
இந்த பதிவும் உதவலாம்: Guntur Chicken Masala: ஒரு முறை சிக்கனை இப்படி செய்து கொடுங்க... அடிக்கடி செய்ய சொல்லி கேப்பாங்க!
கோழி வறுவலின் நன்மைகள்:
உயர்தர புரதம்: கோழி ஒரு முழுமையான புரதம், அதாவது உடலுக்குத் தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது.
சத்துக்கள் நிறைந்தது: கோழி என்பது பி வைட்டமின்கள் (B6, B12), செலினியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகும்.
தசை வளர்ச்சி மற்றும் பழுது: கோழியில் உள்ள புரதம் தசை திசுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்வதற்கும் அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தி ஆதரவு: கோழியில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள், செலினியம் மற்றும் வைட்டமின் B6 போன்றவை, நோயெதிர்ப்பு செயல்பாட்டில் பங்கு வகிக்கின்றன.
மூளை செயல்பாடு: கோழியில் உள்ள சில வைட்டமின்கள், B12 போன்றவை, மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு முக்கியமானவை.
எலும்பு ஆரோக்கியம்: பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க கோழி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: White Sauce Macaroni: ஈஸியான முறையில் வீட்டிலேயே சுவையான ஒயிட் சாஸ் மேக்ரோனி செய்வது எப்படி?
எடை மேலாண்மை: கோழி ஒரு ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம் மற்றும் அதன் புரத உள்ளடக்கம் மற்றும் திருப்தி காரணமாக எடை இழப்பு அல்லது பராமரிப்பில் உதவக்கூடும்.
இதய ஆரோக்கியம்: கோழி மார்பகம் போன்ற மெலிந்த கோழி துண்டுகள், அதிகப்படியான கொழுப்பு இல்லாமல் சமைக்கப்படும் போது இதய ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.
Pic Courtesy: Freepik