Pallipalayam Chicken Recipe In Tamil: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம். எப்பவும் ஒரே மாதரி சிக்கன் வறுவல் செய்து போர் அடிக்குதா? அப்போ இந்த முறை இப்படி செய்து பாருங்க. சுவை வேற லெவலில் இருக்கும். வாருங்கள் சுவையான பள்ளிபாளையம் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sabudana Drink Recipe: ஒரு கப் ஜவ்வரிசி இருந்தால் போதும்; ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத் செய்யலாம்!!
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/4 கிலோ எலும்பில்லாதது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - 10
கறிவேப்பிலை
தேங்காய் - 1 கப் மெல்லியதாக நறுக்கியது
சின்ன வெங்காயம் - 25 நறுக்கியது
தனியா தூள் - 2 தேக்கரண்டி
பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை:
- சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேங்காய் மெல்லியதாக நறுக்கியது சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்பு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- அடுத்து தனியா தூள் சேர்த்து கலந்து, பிறகு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து மிதமான தீயில் வேகவிட்டால் பள்ளிபாளையம் சிக்கன் தயார்!
இந்த பதிவும் உதவலாம்: Mango Burfi: மாம்பழத்தை பச்சையா சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்போ பர்ஃபி செய்து சாப்பிடுங்க!
சிக்கன் சாப்பிடுவதன் நன்மைகள்:
எலும்பு ஆரோக்கியம்: கோழியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது வலுவான எலும்புகளை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: கோழியில் துத்தநாகம் மற்றும் செலினியம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: கோழியில் வைட்டமின்கள் B5 மற்றும் B6 உள்ளன. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.
தசைகளை உருவாக்க உதவுகிறது: கோழி புரதத்தின் நல்ல மூலமாகும். இது தசையை உருவாக்க உதவுகிறது.
தோல் பிரச்சினைகளை நீக்குகிறது: கோழி கல்லீரலில் வைட்டமின் B2 உள்ளது. இது சேதமடைந்த சருமத்தை சரிசெய்யவும், தோல் பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவும்.
ஆற்றல் ஊக்கி: கோழியில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது ஆற்றலை வழங்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: வெயிலுக்கு இதமான கம்மங்கூழ்.. வீட்டிலேயே சிம்பிளா இப்படி செஞ்சி குடிச்சா ஏராளாமான நன்மைகளைப் பெறலாம்
கோழியில் உள்ள புரதம்: கோழி புரதம் உயர்தரமானது. ஏனெனில், இது புரதத்தின் கட்டுமானத் தொகுதிகளான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. கோழி கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும்.
Pic Courtesy: Freepik