Sabudana Drink Recipe In Tamil: கோடைக்காலம் துவங்கி வெயில் நாளுக்கு நாள் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு வீட்டை விட்டே வெளியேறாமல் நம்மில் பலர் வீட்டுக்குளேயே முடங்கி கிபாக்கிறோம். பல நேரம் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக ஏதாவது ஜில்லென குடித்தால் நன்றாக இருக்கும் என நம்மில் பலருக்கு தோன்றும்.
அப்போதெல்லாம், நாம் ஐஸ் வாட்டர் அல்லது லெமன் ஜூஸ் போட்டு குடிப்போம். நம்மில் பலர் ஜவ்வரிசி வைத்து பாயாசம் சாப்பிட்டிருப்போம். ஆனால், எப்போதாவது ஜவ்வரிசி சர்பத் சாப்பிட்டதுண்டா? சரியாகத்தான் படித்தீர்கள். கொளுத்தும் வெயிலுக்கு இதமாக ஜவ்வரிசி சர்பத் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். ஜவ்வரிசி சர்பத் ரெசிபி இதோ_
இந்த பதிவும் உதவலாம்: Foods With Tea: இந்த உணவுகளை எப்பவும் டீ அல்லது காபியுடன் சாப்பிட வேண்டாம்! உயிருக்கே ஆபத்து!
தேவையான பொருட்கள்:
ஜெல்லி துகள்கள் - 1 பாக்கெட்
தண்ணீர் - 400 மி.லி
ஜவ்வரிசி - 1 கப் (250 மி.லி)
ஜெல்லி துண்டுகள்
பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
சர்க்கரை - 1/4 கப்
ரோஸ் சிரப் - 2 ஸ்பூன்
ஜவ்வரிசி சர்பத் செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஜெல்லி கிரிஸ்டல்ஸ் , தண்ணீர் சேர்த்து கரைத்து ஒரு டிரேயில் கொட்டி ஜெல்லிதயார் செய்யவும். இதை நன்றாக ஆற விடவும். ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- ஒரு கப் ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி மேல கொஞ்சம் குளிர்ந்த நீர் ஊற்றவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் , கால் கப் சாக்கரை, கொஞ்சம் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து விடவும். வேக வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.
- பிரிட்ஜ்ல் இரண்டு மணி நேரம் குளிர வைக்கவும். ஜெல்லி துண்டுகளை சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Rava Kesari: மாங்காய் சீசன் வந்தாச்சு... குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மாம்பழ கேசரி செய்யலாமா?
ஜவ்வரிசி சர்பத் சாப்பிடுவதன் நன்மைகள்:
ஆற்றல் மூலமாகும்: சபுதானா கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல மூலமாகும். இது விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது: இதில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் உள்ளது. இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது: சபுதானா கால்சியம், மெக்னீசியம் மற்றும் பிற தாதுக்களால் நிறைந்துள்ளது. அவை வலுவான எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கின்றன மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்க உதவுகின்றன.
பசையம் இல்லாத விருப்பம்: இது ஒரு இயற்கையான பசையம் இல்லாத உணவு, இது செலியாக் நோய் அல்லது பசையம் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சுட்டெரிக்கும் வெயிலில் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
எடை இழப்புக்கு உதவக்கூடும்: இதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருந்தாலும், சபுதானாவை மிதமாக உட்கொள்ளும்போது மற்றும் சீரான உணவுடன் இணைக்கும்போது எடை இழப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
இதர சாத்தியமான நன்மைகள்: சில ஆய்வுகள் சபுதானா இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கவும் உதவும் என்று கூறுகின்றன.
Pic Courtesy: Freepik