Inji Sarbath in Tamil: கோடைக்காலம் துவங்கி வெயில் நாளுக்கு நாள் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு வீட்டை விட்டே வெளியேறாமல் நம்மில் பலர் வீட்டுக்குளேயே முடங்கி கிபாக்கிறோம். பல நேரம் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக ஏதாவது ஜில்லென குடித்தால் நன்றாக இருக்கும் என நம்மில் பலருக்கு தோன்றும்.
அப்போதெல்லாம், நாம் ஐஸ் வாட்டர் அல்லது லெமன் ஜூஸ் போட்டு குடிப்போம். இஞ்சி ஆரோக்கியத்திற்கு நல்லது என நம்மில் பலருக்கு தெரியும். இது சிறந்த செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை பல நன்மைகளை வழங்குகிறது. அந்தவகையில், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இஞ்சி சர்பத் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இஞ்சி சர்பத் செய்முறை இதோ_
இந்த பதிவும் உதவலாம்: தினமும் 1 கிளாஸ் லெமன் வாட்டர் குடிச்சி பாருங்க.. ஆச்சரியத்தை நீங்களே உணர்வீர்கள்..
தேவையான பொருட்கள்
இஞ்சி சிரப் செய்ய
இஞ்சி - 300 கிராம்
தண்ணீர் - 5 கப்
சர்க்கரை - 2 கப்
இஞ்சி சர்பத் செய்ய
இஞ்சி சிரப்
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
எலுமிச்சைபழ துண்டுகள்
புதினா இலை
ஐஸ் கட்டிகள்
சோடா
இஞ்சி சர்பத் செய்முறை:
- இஞ்சி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- நறுக்கிய இஞ்சியை பாத்திரத்தில் போட்டு , தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிடவும்
- இஞ்சி சாறை வடிக்கட்டவும்
- வடிக்கட்டிய சாறை பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
- இஞ்சி சாறு சிறிது கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
- கொதித்த இஞ்சி சிரப்'பை ஆறவிட்டு, கிளாஸ் பாட்டில்'லில் ஊற்றி பிரிட்ஜ்'ஜில் வைத்து பயன்படுத்தவும்.
- இஞ்சி ஷர்பத் செய்ய, செய்த இஞ்சி சிரப்'பை ஊற்றி, ஒரு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும் .
- அடுத்து இதில் புதினா இலை, எலுமிச்சைபழ துண்டுகள், ஐஸ் கட்டிகள் போடவும்.
- இறுதியாக சோடா ஊற்றி, நன்கு கலக்கவும். சுவையான இஞ்சி சர்பத் தயார்!
இந்த பதிவும் உதவலாம்: கொளுத்தும் வெயிலில் உடல் சூட்டைத் தணிக்க இந்த ஒரு மேஜிக் ட்ரிங் குடிங்க
இஞ்சி சர்பத் குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள்:
சிறந்த செரிமானம்: பித்தநீர் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலமும், இரைப்பை குடல் இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலமும் இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதாக அறியப்படுகிறது. இது அஜீரணம், வீக்கம் மற்றும் வாயுவை போக்க உதவும்.
குமட்டல் நிவாரணம்: கீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய இயக்க நோய், காலை நோய் மற்றும் குமட்டல் உள்ளிட்ட குமட்டலைப் போக்க இஞ்சி பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்: இஞ்சியில் உள்ள ஒரு சேர்மமான ஜிஞ்சரால், உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலியைக் குறைக்கவும், கீல்வாதம் போன்ற நிலைகளை மேம்படுத்தவும் உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Drink Coffee: நீங்க காஃபி பிரியரா? மறந்து கூட இந்த டைம்ல காபி குடிக்காதீங்க உயிருக்கே ஆபத்து!
கொழுப்பு மேலாண்மை: சில ஆய்வுகள் இஞ்சி LDL (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவும் என்று கூறுகின்றன.
பிற சாத்தியமான நன்மைகள்: இஞ்சி இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும்.
Pic Courtesy: Freepik