Summer Special Dry Fruits Lassi : லஸ்ஸி என்பது பலர் விரும்பும் பானங்களில் ஒன்றாகும். கொளுத்தும் வெயிலில் ஒரு கிளாஸ் குளிர்பானம் குடிப்பதால் கிடைக்கும் கிக்கே வேற லெவலுக்கு இருக்கும். இதை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தயிர் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதனால் தான் பலர் கோடையில் குளிர் பானங்களுக்குப் பதிலாக இதைக் குடிக்க விரும்புகிறார்கள்.
இருப்பினும், லஸ்ஸி எப்போதும் ஒரே மாதிரியாக குடித்து, குடித்து போர் அடித்துவிடும். அதனால் தான் நாங்கள் இன்று பல வெரைட்டிகளில் லஸ்ஸி ரெசிபிகளை கொண்டு வந்துள்ளோம். தயிர் மட்டும் தயாராக வைத்திருந்தால் 5 நிமிடங்களில் இதை தயாரித்துவிடலாம் . இந்த கட்டுரை மூலமாக சோம்பலாக உணராமல் உங்கள் உடலை குளிர்விக்கும் சுவையான, இனிப்பு லஸ்ஸியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
ட்ரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி:
தேவையான பொருட்கள்:
- கெட்டியான குளிர்ந்த தயிர் - 1 கப்
- பிஸ்தா - 2 டீஸ்பூன்
- பாதாம் - 2 டீஸ்பூன்
- வால்நட்ஸ் - 1
- சர்க்கரை - 2 தேக்கரண்டி
- குங்குமப்பூ - ¼ டீஸ்பூன்
- உலர்ந்த பழங்கள் - சிறிது

தயாரிப்பு முறை:
- குளிர்ந்த, கெட்டியான தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து , மிருதுவாகும் வரை நன்றாக கலக்கவும்
- ஒரு மிக்ஸி ஜாடியில் கெட்டியான தயிர், பிஸ்தா , பாதாம், அத்திப்பழம் , அக்ரூட், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து மென்மையாகும் வரை அடித்துக்கொள்ளவும்
- சுமார் 5 நிமிடங்கள் அதிக வேகத்தில் அரைக்கவும்.
- இந்த முறையில் தயாரிக்கப்பட்ட பானத்தை ஒரு கிளாஸில் ஊற்றி, அதன் மேல் உலர்ந்த பழத் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறினால் , மிகவும் சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி தயார்
சாக்லேட் லஸ்ஸி:
தேவையான பொருட்கள்:
கெட்டியான குளிர்ந்த தயிர் - 1 கப்
சாக்லேட் சிரப் - 3 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
முக்கிய கட்டுரைகள்
தயாரிப்பு முறை:
- ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிரை எடுத்து, மிருதுவாகும் வரை நன்றாக அடிக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாடியில் கெட்டியான தயிர், சாக்லேட் சிரப் மற்றும் சர்க்கரையைச் சேர்த்து,அதிவேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் கலக்கவும், பாதியிலேயே நிறுத்தவும்.
- இந்த முறையில் தயாரிக்கப்பட்ட பானத்தை ஒரு கிளாஸில் ஊற்றி, சாக்லேட் சிரப்பால் அலங்கரித்து பரிமாறவும். மிகவும் சுவையான சாக்லேட் லஸ்ஸி தயார்.
பஞ்சாபி லஸ்ஸி:
தேவையான பொருட்கள்:
கெட்டியான குளிர்ந்த தயிர் - 1 கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தயாரிப்பு முறை:
- ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிரை எடுத்து, மிருதுவாகும் வரை நன்றாக அடிக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாடியில் கெட்டியான தயிர், சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியைச் சேர்த்து , அதிவேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் கலக்கவும், பாதியிலேயே நிறுத்தவும்.
- இந்த முறையில் தயாரிக்கப்பட்ட பானத்தை ஒரு கிளாஸில் ஊற்றி பரிமாறினால், மிகவும் சுவையான பஞ்சாபி லஸ்ஸி கிடைக்கும்.
Image Source: Freepik