Mango lassi recipe: ஈஸியான முறையில் அசத்தலான சுவையில் மாம்பழ லஸ்ஸி! இப்படி செய்து பாருங்க

How to make mango lassi recipe: வீட்டிலேயே உள்ள சில பொருள்களைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் எளிதான முறையில் சில ரெசிபிகளைத் தயார் செய்யலாம். அவ்வாறே, வீட்டில் எளிமையான முறையில் மாம்பழத்தை கொண்டு தயார் செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி தயாரிக்க செய்யத் தேவைப்படும் பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Mango lassi recipe: ஈஸியான முறையில் அசத்தலான சுவையில் மாம்பழ லஸ்ஸி! இப்படி செய்து பாருங்க


How to make mango lassi recipe: முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நம் அனைவருக்கும் பிடிக்கும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது சுவையுடன் கூடிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியது. ஆனால், மாம்பழங்கள் சில சீசன்களில் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். எனினும், தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்களால் அனைத்து பழங்களும் எல்லா சீசன்களிலுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வசதியால், நாம் விரும்பும் பழங்களை எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம்.

இதன் மூலம் பழங்களின் அனைத்து வகையான நன்மைகளையும் பெற முடியும். அவ்வாறே சுவையான மாம்பழத்தை பலரும் விரும்பி உண்ணுவர். ஆனால் மாம்பழத்தை வைத்து பல்வேறு வகையான உணவுப் பொருள்களைத் தயார் செய்ய முடியும். அதில் ஒன்றாகவே மாம்பழத்தைக் கொண்டு எளிமையாக தயார் செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி அமைகிறது. இதில் மாம்பழ லஸ்ஸியை செய்ய தேவையான பொருள்கள் மற்றும் அதை எப்படி தயார் செய்வது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mango Chia Seeds: மேங்கோ ஜூஸ் உடன் இந்த ஒரு விதையை சேர்த்து குடிங்க. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!

மாம்பழ லஸ்ஸி தயார் செய்யும் முறை

தேவையானவை

மாம்பழம் - 1

பால் - அரை கப்

தயிர் - 1 கப்

பாதாம் - 1 டேபிள் ஸ்பூன்

பிஸ்தா - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்

குங்குமப் பூ - அரை டேபிள் ஸ்பூன்

ஐஸ்கட்டி - தேவையான அளவு

சர்க்கரை - தேவையான அளவு

மாம்பழ லஸ்ஸி தயாரிப்பது எப்படி?

  • மாம்பழ லஸ்ஸியை தயார் செய்வதற்கு முதலில் மாம்பழம், பிஸ்தா மற்றும் பாதாம் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஏலக்காயை மிக்சியில் அரைத்து, பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின், பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அளவு பாலை ஊற்றி மிதமான வெப்பத்தில் நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் காய்ச்சிய பாலை சிறிது நேரம் வைத்து ஆற விட வேண்டும்.
  • பிறகு மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழத்தை எடுத்துக் கொண்டு, அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர், அதில் ஒரு கப் அளவிலான தயிரை ஊற்றி, அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Baked Mango Yogurt Recipe: நாவில் எச்சில் ஊறும் மேங்கோ யோகர்ட் ரெசிபி! இப்படி ஒரு முறை செய்து பாருங்க

  • பின்பு அதில் காய்ச்சி ஆற வைத்த பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் போன்றவற்றையும் சேர்த்து அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த லஸ்ஸி கெட்டியாக இருப்பின், அதில் சிறிதளவு பால் அல்லது தண்ணீரை சேர்த்து அதை மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு கண்ணாடி டம்ளர் ஒன்றை எடுத்து அதில் ஐஸ் கட்டிகளைச் சேர்க்க வேண்டும்.
  • பின்பு அரைத்த லஸ்ஸியை டம்ளரில் ஊற்றலாம். பின் அதன் மேலே நறுக்கி வைத்த பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப் பூ போன்றவற்றைத் தூவ வேண்டும்.
  • இப்போது சுவையான மாம்பழ லஸ்ஸி தயாராகி விட்டது. இந்த சுவையான மற்றும் அருமையான லஸ்ஸியை குழந்தைகளுக்கும் செய்து தரலாம்.

மாம்பழ லஸ்ஸியின் ஆரோக்கிய நன்மைகள்

மாம்பழம், தயிர், சர்க்கரை, பால் போன்றவற்றை கொண்டு தயார் செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி தரும் நன்மைகளைக் காணலாம்.

எடையைக் குறைக்க

மாம்பழ லஸ்ஸியில் குறைந்த கலோரிகள் இருப்பினும், இது அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். இதில் போதுமான அளவிலான நார்ச்சத்துக்கள், ஸ்டார்ச் மற்றும் புரதம் போன்றவை உள்ளது. மேலும், இது உடலில் செரிமானத்திற்கு உதவக்கூடியதாகும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் மாம்பழ லஸ்ஸியை எடுத்துக் கொள்ளலாம்.

இரத்த சோகை குணமாக

மாம்பழ லஸ்ஸியில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களான இரும்பு, புரதம் மற்றும் கரோட்டின் போன்றவை உள்ளது. இது இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இது பெரிதும் நன்மை பயக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு

மாம்பழத்தில் நார்ச்சத்துகள் மற்றும் பெக்டின் உள்ளது. இது இதய நோயாளிக்கு பெரிதும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களாகும். இவை இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், பெக்டின் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இவ்வாறு மாம்பழ லஸ்ஸியை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Mango Lassi Benefits: சுவை தரும் மாம்பழ லஸ்ஸியில் இத்தனை நன்மைகளா?

Image Source: Freepik

Read Next

தினமும் ஒரு கேரட் போதும்.! எவ்வளவு நல்லது தெரியுமா.?

Disclaimer