Cook With Comali Season 5 Baked Mango Yogurt Recipe: விஜய் டிவியில் இன்று பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் புது புது ரெசிபிகளைச் செய்து வருகின்றனர். இதை மக்களும் தங்கள் வீடுகளில் செய்து பார்த்து அந்த ரெசிபியின் சுவையை அனுபவிக்க தவறுவதில்லை.
அந்த வகையில் இந்த வாரம் அக்ஷய் கமல் அவர்கள் மாம்பழம் மற்றும் தயிர் இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான டிஷ் ஒன்று செய்துள்ளார். இது இனிப்பு சுவையுடன் நாவில் எச்சில் ஊறும் வகையில் அமைகிறது. இதை எளிதான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மேங்கோ யோகர்ட் ரெசிபி தயாரிப்பு முறை குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: CWC Irfan’s Recipes: இர்ஃபானின் சுண்டல் மசாலா வடை ரெசிபி! இத ஒரு முறை ருசிச்சா திரும்ப திரும்ப கேப்பீங்க
Baked மேங்கோ யோகர் ரெசிபி தயார் செய்யும் முறை
தேவையானவை
- கெட்டியான தயிர் - 1/2 கப்
- பழுத்த மாம்பழம் - 1/4 கப்
- ஃப்ரஸ் கிரீம் (Fresh Cream) - 1/2 கப்
- சுண்டிய பால் (Condensed Milk) - 1/4 கப்

செய்முறை
- Baked மேங்கோ யோகர்ட் ரெசிபி தயார் செய்வதற்கு முதலில் கெட்டியான தயிரை எடுத்துக் கொள்ளலாம்.
- இந்தத் தயிரில் உள்ள நீரை வடிகட்டி தனியாகப் பிரித்தெடுக்க, துணியைப் பயன்படுத்தலாம்.
- இவ்வாறு தயிரிலிருந்து முழுத் தண்ணீரையும் பிரிக்கும் போது, தயிர் கெட்டியாக இருப்பதை உணரலாம்.
- பிறகு கால் கப் அளவிலான மாம்பழத்தை எடுத்துக் கொண்டு அதை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு தண்ணீரை வெளியேற்றி தனியாக வைக்கப்பட்ட தயிரை கெட்டியாக இல்லாமல் கரண்டியால் கலக்க வேண்டும்.
- அதன் பின், அரைத்து வைத்த மாம்பழத்தை தயிரில் சேர்க்க வேண்டும்.
- பிறகு அதில் ஃப்ரஸ் கிரீம் மற்றும் சுண்டிய பால் சேர்த்து கட்டி எதுவும் இல்லாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- இது நன்கு கிரீமியாக இருக்கும் நிலையை அடையும் வரை கலக்கலாம்.
- இந்த கிரீம் கலவையை சிறிய கிண்ணங்களில் வைத்து ஐஸ்கிரீம் கப்பில் ஐஸ்கிரீம் இருப்பது போல வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Rasam: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முழு நெல்லிக்காய் ரசம்… எப்படி செய்யணும் தெரியுமா?
- அதன் பிறகு, அந்த கப் மேலே அலுமினியல் ஃபாயில் பேப்பரை வைத்து மூடி வைக்க வேண்டும்.
- பின் இதை நேரடியாக பேக்கிங் செய்யாமல், Baking Pan ஒன்றில் சூடான தண்ணீரை ஊற்றி, அதில் இந்த கிண்ணங்களை வைத்துக் கொள்ளலாம்.
- கிண்ணங்களை வைத்து அந்த அலுமினியப் பேப்பரிலிருந்து ஆவி வெளியேறுவதற்கு சிறிய துளைகளை உருவாக்க வேண்டும்.
- இந்த Baking Pan-ஐ ப்ரீ ஹீட்டேட் ஓவனில் (Preheated Oven) 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.
- அதன் பின் இதை வெளியில் எடுத்து, அறை வெப்பநிலைக்கு வந்தவுடன், குளிர்சாதனப் பெட்டியில் 2 முதல் 4 மணி நேரம் வைக்கலாம்.
- இவ்வாறு சூப்பரான மற்றும் சுவையான Baked மேங்கோ யோகர்ட் ரெசிபி தயாராகி விட்டது.

இந்த Baked மாம்பழ தயிர் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியாகும். இதில் கூறப்பட்ட எளிய முறையைப் பயன்படுத்தி இந்த சுவையான ரெசிபியைத் தயார் செய்யலாம். எனினும், மாம்பழத்தைத் தயிருடன் சேர்த்து சாப்பிடுவது சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே தயிர் அல்லது மாம்பழ உணவுகளில் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ரெசிபி எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Veg Lollipop: உங்க குழந்தைக்கு இப்படி வெஜ் லாலிபாப் செய்து கொடுங்க.. அசந்து போய்டுவாங்க!
Image Source: Freepik