Cook With Comali VTV Ganesh Mexicon Enchiladas Recipe: குக் வித் கோமாளி சீசன் 5 நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாப்பிக்கில் போட்டிகள் நடைபெறும். அதில் போட்டியாளர்கள் தங்களின் அசத்தலான திறமையால் நடுவர்களிடம் பாரட்டு பெற்றும், சிலர் எலிமினேஷன் செய்யப்பட்டும் வருகிறார்கள்,
இந்த வாரம் இன்டர்நேஷனல் ரவுண்ட் நடந்தது. கொஞ்சம் வித்தியாசமாக, கிராமத்து பாட்டிகளை அழைத்து வந்து இன்டர்நேஷனல் உணவுகள் சமைக்க உதவியாக இருக்க வைத்தனர். இது நகைச்சுவை கலாட்டா நடந்த வண்ணம் இருந்தது. இதில் போட்டியாளர்களுக்கு இன்டர்நேஷனல் உணவுகள் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் விடிவி கணேஷ் அவர்களுக்கு மெக்ஸிகன் டிஷ் கொடுக்கப்பட்டது. இதில் அவர் மெக்ஸிகன் எஞ்சிலதாஸ் செய்தார். இதை செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் பாராட்டினர். இந்த டிஷ் இவருக்கு செஃப் ஆஃப் தீ வீக் வெல்ல உதவியாக இருந்தது. இந்த மெக்ஸிகன் எஞ்சிலதாஸ் எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.
மெக்ஸிகன் எஞ்சிலதாஸ் ரெசிபி (Mexicon Enchiladas Recipe)
தேவையான பொருட்கள்
- 3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
- 12 கார்ன் டார்ட்டில்லா
- 3/4 கப் நறுக்கிய வெங்காயம்
- துண்டாக வெட்டப்பட்ட 1 முழு பூண்டு
- 1 நறுக்கிய தக்காளி
- 3/4 கப் நறுக்கப்பட்ட ஊறுகாய் பச்சை மிளகாய்
- 1/2 கப் தண்ணீர்
- 1/2 தேக்கரண்டி உலர்ந்த ஆர்கனோ
- 4 கப் செடார் சீஸ்
- 1/2 இலைக்கோசு
- 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்
- உப்பு தேவையான அளவு
- 1 கப் புளிப்பு கிரீம்
- 1 கைப்பிடி கொத்தமல்லி

செய்முறை
- அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
- மென்மையாக்க டார்ட்டிலாக்களை லேசாக வறுக்கவும்
- ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் பளபளப்பாகவும் சூடாகவும் இருக்கும்போது, கடாயில் ஒரு கார்ன் டார்ட்டில்லாவை சேர்க்கவும்.
- சில விநாடிகள் சமைக்கவும். பின்னர் இதை திருப்பி, மேலும் சில வினாடிகளுக்கு சமைக்கவும்.
- அனைத்து டார்ட்டிலாக்களையும் இந்த வழியில் சமைக்கவும்.
- டார்ட்டிலாக்களை ஒரு தட்டில் மாற்றவும்.
- தற்போது ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மிதமான சூட்டில் சூடாக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, 5 முதல் 6 நிமிடங்கள் வதக்கவும்.
- இதனுடன் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- இதில் தக்காளி, பச்சை மிளகாய், 1/2 கப் தண்ணீர் மற்றும் ஆர்கனோ சேர்க்கவும். ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து சுவைக்கவும்.
- எஞ்சிலதாஸ் சாஸ் ரெடியாதும் இது அடுப்பில் இருந்து இரக்கவும்.
- தற்போது ஒரு கேசரோல் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். இதில் சிறிது ஆலிவ் எண்ணெயை தடவவும்.
- துருவிய செடார் சீஸ் உடன் டார்ட்டில்லாவை லேசாக மூடி, பின்னர் அதை உருட்டி, கேசரோல் பாத்திரத்தில் வைக்கவும்.
- அனைத்து டார்ட்டிலாக்களும் நிரப்பப்பட்டு உருட்டப்படும் வரை தொடரவும்.

- கேசரோல் பாத்திரத்தில் டார்ட்டிலாவின் மேல் சாஸ் சேர்க்கவும். சுருட்டப்பட்ட டார்ட்டிலாக்கள் சாஸுடன் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
- தற்போது சீஸை கொண்டு முழுமையாக இதை கவர் செய்யவும்.
- 10 முதல் 15 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை அடுப்பில் கேசரோலை வைக்கவும்.
- ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் உப்பு தூவப்பட்ட இலைக்கோசுகளை இதன் மேல் தூவவும். மேலும் கொத்தமல்லி மற்றும் புளிப்பு கிரீம் கொண்டு எஞ்சிலதாஸை அலங்கரிக்கவும்.
- அவ்வளவு தான் அருமையாக மெக்ஸிகன் எஞ்சிலதாஸ் ரெடி. தற்போது இதை சுவைத்து மகிழவும்.
Image Source: Freepik