Cook with Comali VTV Ganesh Gilli Chicken Biryani Recipe: விஜய் டிவி நடத்தி வரும் குக் வித் கோமாளி ஷோ மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் உள்ள குக், கோமாளி, செஃப், தொகுப்பாளர்கள் என அனைவரும், அவர்களுக்கென ஒரு இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளனர். பல சீசனை கடந்து வந்துள்ள இந்த குக் வித் கோமாளி ஷோ, தற்போது 5ஆவது சீசனை பார்த்து வருகிறது.
குக் வித் கோமாளி சீசன் 5 கடும் போட்டிகளுடன் நடந்து வருகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குக்கும் தங்களது திறமைகளை கொண்டு, கடும் போட்டியாளர்களாக திகழ்கின்றனர். குறிப்பாக இர்ஃபான், பிரியங்கா, சுஜிதா ஆகியோர், வார வாரம் பாராட்டுகளை பெற்று, தங்களை யாரும் நெருங்க முடியாது என்று சவால் விடும் விதமாக தங்களது படைப்புகளை கொடுக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களுக்கு பிரியாணி ஸ்பெஷல் ரவுண்ட் என்று கொடுக்கப்பட்டது. இதில் பூஜா, வசந்த் வசி, அக்ஷய் கமல் ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்தனர். இறுதியில் வசந்த வசி எலிமினேட் ஆனார். இந்த போட்டியின் போது, விடிவி கணேஷ் சிக்கன் கில்லி பிரியாணி செய்தார். இது நல்ல பாராட்டை பெற்றது. சிக்கன் கில்லி பிரியாணி எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.
கில்லி சிக்கன் பிரியாணி ரெசிபி (Gilli Chicken Biryani Recipe)
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 500 கிராம்
எண்ணெய் - 1/2 கப்
பிரியாணி இலை - 2
பட்டை - 1 அங்குலம்
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
நட்சத்திர சோம்பு - 1
கல்பாசி - 1/2 டீஸ்பூன்
ஜாவித்ரி - 1
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தக்காளி - 4
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 டீஸ்பூன்
சிக்கன் - 500 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, முழு மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- வாணலியில் பாதியாக நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதையடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தொடர்ந்து சமைக்கவும்.
- தற்போது இதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். மீதமுள்ள கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை பின்னர் பயன்படுத்த எடுத்து வைக்கவும்.
- தற்போது தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- கரம் மசாலா, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு மற்றும் தயிர் சேர்க்கவும். நன்றாக கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இதில் சிக்கன் மற்றும் லெமன் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடம் மூடிபோட்டு வேக விடவும்.

- பின்னர் இதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்து வரும் நேரத்தில் அரிசியை சேர்க்கவும். மீதமுள்ள கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.
- பாத்திரத்தை தட்டு கொண்டு மூடி, 20 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.
- அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் மூடியை திறக்க வேண்டாம். 10 நிமிடம் கழித்து முடியை திறந்து கலந்து விடவும்.
- அவ்வளவு தான் வீடே மணக்கும் கில்லி பிரியாணி ரெடி. வெங்காயம் ரைத்தா வைத்து ருசிக்கவும்.
முன்னெச்சரிக்கை
எண்ணெய், நெய் மற்றும் இறைச்சி காரணமாக பிரியாணியில் கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியம் அதிகமாக இருக்கும்.
இந்த வகையான உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும். இருப்பினும், நீங்கள் பகுதி கட்டுப்பாட்டை உறுதிசெய்து ஆரோக்கியமான மூலப்பொருள் மாற்றீடுகளை செய்தால் அது எடை இழப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
மெலிந்த இறைச்சிகள், பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவைக் குறைத்தல் மற்றும் அதிக காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் பிரியாணி ஆரோக்கியமாக இருக்கும்.
பிரியாணி கணமான உணவு என்பதால், இதனை மதிய உணவாக சாப்பிடுவது நல்லது. இதை காலை அல்லது இரவு நேரத்தில் சாப்பிடால், அது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
உங்கள் உணவின் ஒட்டுமொத்த சமநிலையைக் கருத்தில் கொள்வதும், நீங்கள் போதுமான உடல் செயல்பாடுகளைப் பெறுவதை உறுதி செய்வதும் அவசியம்.