How To Make Mushroom Biryani: இந்த வாரம் குக் வித் கோமாளியில் குழந்தைகள் ஸ்பெஷல் நடந்தது. இதில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு உணவுகள் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் திவ்யா துரைசாமி, மஷ்ரூம் பிரியாணி, வெஜ் கட்லெட் மற்றும் ஃப்ரூட் சாலட் செய்தார். இந்த டிஷ் செஃப் ஆஃப் தி வீக் பெற்றது. இதில் திவ்யா துரைசாமி செய்தவாறு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று இங்கே காண்போம்.

மஷ்ரூம் பிரியாணி ரெசிபி (Mushroom Biryani Recipe)
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 500 கிராம்
எண்ணெய் - 1/2 கப்
பிரியாணி இலை - 2
பட்டை - 1 அங்குலம்
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
நட்சத்திர சோம்பு - 1
கல்பாசி - 1/2 டீஸ்பூன்
ஜாவித்ரி - 1
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தக்காளி - 4
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 டீஸ்பூன்
மஷ்ரூம் - 500 கிராம்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
இதையும் படிங்க: Gilli Chicken Biryani: விடிவி கணேஷ் இப்படி தான் கில்லி சிக்கன் பிரியாணி செஞ்சாரு..
செய்முறை
- பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி, முழு மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- வாணலியில் பாதியாக நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதையடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தொடர்ந்து சமைக்கவும்.
- தற்போது இதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும். மீதமுள்ள கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை பின்னர் பயன்படுத்த எடுத்து வைக்கவும்.
- தற்போது தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- கரம் மசாலா, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு மற்றும் தயிர் சேர்க்கவும். நன்றாக கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இதில் மஷ்ரூம் மற்றும் லெமன் சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிடம் மூடிபோட்டு வேக விடவும்.
- பின்னர் இதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- தண்ணீர் கொதித்து வரும் நேரத்தில் அரிசியை சேர்க்கவும். மீதமுள்ள கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.
- பாத்திரத்தை தட்டு கொண்டு மூடி, 20 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.
- அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் மூடியை திறக்க வேண்டாம். 10 நிமிடம் கழித்து முடியை திறந்து கலந்து விடவும்.
- அவ்வளவு தான் வீடே மணக்கும் மஷ்ரூம் பிரியாணி ரெடி. வெங்காயம் ரைத்தா வைத்து ருசிக்கவும்.
Image Source: Freepik