CWC Sujitha Recipe: சுஜிதா செய்த முட்டை ஆப்பம் ஆட்டு கால் பாயா ரெசிபி.!

  • SHARE
  • FOLLOW
CWC Sujitha Recipe: சுஜிதா செய்த முட்டை ஆப்பம் ஆட்டு கால் பாயா ரெசிபி.!

ஒவ்வொரு வாரமும் ஒரு டிஸ் நல்ல வரவேற்ப்பை பெறும். அந்த வகையில் கடந்த வாரம் முட்டை ஆப்பம் மற்றும் ஆட்டு கால் பாயா அனைவராலும் பாராட்டப்பட்டது. குக் வித் கோமாளியில் கடந்த வாரம் சுஜிதா செஃப் ஆஃப் தி வீக் வாங்கினார். இதற்கு இவர் செய்த முட்டை ஆப்பம் மற்றும் ஆட்டு கால் பாயா தான் காரணம். இவர் செய்த டிஸ், நடுவர்களான தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜால் பாராட்டப்பட்டது.

செஃப் ஆஃப் தி வீக் வாங்கிய சுஜிதா. சுஜிதா செய்து அசத்திய முட்டை ஆப்பம் மற்றும் ஆட்டு கால் பாயா எப்படி செய்யனும் என்று இங்கே விரிவாக காண்போம்.

முட்டை ஆப்பம் ரெசிபி

தேவையான பொருட்கள்

பச்சை அரிசி - 1 கப்

அவல் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

தேங்காய் பேஸ்ட் - 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

முட்டை - 1

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசியை சேர்த்து, அது நன்கு கழுவு, தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர், மாவை அரைப்பதற்கும் 30 மணி நேரம் முன் அவலை ஊற வைக்கவும்.

தற்போது ஊற வைத்த அவல் மற்றும் அரிசியை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

ஆப்ப மாவு அரைத்த பின் 12 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

மாவு ரெடி ஆனதும், இதனுடன் தேங்காய் பேஸ்ட் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

தற்போது ஆப்ப சட்டியை எண்ணெய் ஊற்றி சூடாக்கிக்கொள்ளவும்.

இதில் ஆப்ப மாவை சேர்த்து திரட்டி விடவும்.

தற்போது மூடியை போட்டு 1 நிமிடம் அப்படியே விடவும்.

பின்னர், இதில் முட்டையை உடைத்து ஊற்றி, மீண்டும் சில நிமிடம் மூடி வைக்கவும்.

அவ்வளவு தான் முட்டை ஆப்பம் ரெடி. இதனை ஆட்டி கால் பாயா உடன் மகிழவும்.

இதையும் படிங்க: CWC Irfan Recipe: MSG இல்லாமல் ரோட்டு கடை ஸ்டைல் Fried Rice செய்யனுமா.! இர்ஃபான் ரெசிபியை ட்ரை பண்ணவும்.

ஆட்டு கால் பாயா ரெசிபி

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

பிரிஞ்சி இலை - 1

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

ஆட்டு கால் - 1/2 கிலோ

தேங்காய் - 1 கப்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

புதினா - 1/2 கைபிடி

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

சோம்பு - 3/4 டீஸ்பூன்

பெப்பர் - 1/2 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

மல்லி இலை - ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் மிக்ஸியில் தேங்காய், சீரகம், சோம்பு, பெப்பர், கசகசா, கிராம்பு, பட்டை, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது குக்கரில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் பட்டை, பிரஞ்சு இலை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் ஆட்டு கால் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். இதனை கலந்து விட்டு, இதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.

தற்போது குக்கரை மூடி 8 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கிய உடன் குக்கரை திறந்து, மல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

அவ்வளவு தான் அருமையான ஆட்டு கால் பாயா ரெடி. இதனை முட்டை ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிடவும். ருசி அப்படி இருக்கும்.

Read Next

CWC Irfan Recipe: MSG இல்லாமல் ரோட்டு கடை ஸ்டைல் Fried Rice செய்யனுமா.! இர்ஃபான் ரெசிபியை ட்ரை பண்ணவும்.

Disclaimer

குறிச்சொற்கள்