Expert

CWC Priyanka Special: செஃப் தாமுவே அசந்து போன பிரியங்காவின் நுங்கு பாயா.. செய்முறை இங்கே!

  • SHARE
  • FOLLOW
CWC Priyanka Special: செஃப் தாமுவே அசந்து போன பிரியங்காவின் நுங்கு பாயா.. செய்முறை இங்கே!


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். அந்தவகையில், பிரியங்கா நுங்கு பாயா செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Chicken 65 Recipe: நடிகர் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் 56 செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

நுங்கு - 5.
எண்ணெய் - 2 ஸ்பூன்.
பட்டை - 1.
பிரியாணி இலை - 1.
கிராம்பு - 1.
வெங்காயம் - 1.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்.
கருவேப்பிலை - ஒரு கொத்து.
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1 கப்.
முந்திரி - 10.
சோம்பு - 1 ஸ்பூன்.
கசகசா - 1 ஸ்பூன்.
பட்டை - 2.
கிராம்பு - 2.
ஏலக்காய் - 2.
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
எழுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.

நுங்கு பாயா செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து சிறிது உப்பு சேர்த்து தோலுரித்த நுங்கை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் பட்டை 1, கிராம்பு 1, பிரியாணி இலை 1, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 2, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
  • இப்போது மிக்ஸியில் 1 கப் தேங்காய், முந்திரி 10, சோம்பு 1 தேக்கரண்டி, கசகசா 1 தேக்கரண்டி, பட்டை 2, கிராம்பு 2, ஏலக்காய் 2 சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து அதையும் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம் : Ennai Kathirikai Kulambu: நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா?

  • இப்போது அந்த கலவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த நுங்கை அதில் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
  • பின்னர் கொத்தமல்லி, புதினா சிறிது சேர்த்து எழுமிச்சை சாறு சிறிது பிழிந்து கலக்கிவிட்டு இறக்கினால் சுவையான நுங்கு பாயா தயார்.

இதை இடியாப்பம், இட்லி, தோசை என அனைத்துடனும் சாப்பிடும்போது வேற லெவலில் இருக்கும். நீங்களும் இதை வீட்டிலே இந்த ரெசிபியை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

ஐஸ் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்

கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் நாட்களில் நம் உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்தும் பிரச்சனைகள் அதிகம். இந்நிலையில், ஐஸ் ஆப்பிள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் அதன் நுகர்வு இயற்கையான முறையில் நீரிழப்பு சமாளிக்க உதவும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது

நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய்களில் இருந்து விலகி இருக்கவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. ஐஸ் ஆப்பிள் இதற்கு ஒரு சிறந்த வழி. ஏனெனில், இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Chicken Satti Curry: குக் வித் கோமாளியில் இர்பான் செய்த கேரளா சிக்கன் சட்டிக்கறி எப்படி செய்யணும் தெரியுமா?

செரிமான பிரச்சனைகளை குறைக்கும்

ஐஸ் ஆப்பிள் அமிலத்தன்மை, வயிற்று புண்கள், எரியும் உணர்வு போன்ற பல்வேறு வயிற்று பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நீங்கள் உங்கள் உணவில் ஐஸ் ஆப்பிளை சேர்க்கலாம்.

எடை குறைக்க உதவும்

உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் இந்தப் பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இதில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், இதன் காரணமாக உங்களுக்கு பசி ஏற்படாது. இது தவிர, இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது.

Pic Courtesy: Freepik

Read Next

Kadapa Cabbage Poriyal: இந்த முறை முட்டைகோஸை இப்படி செய்து கொடுங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

Disclaimer

குறிச்சொற்கள்