Expert

CWC Priyanka Special: மாதம்பட்டியை வாயடைக்க வைத்த பிரியங்காவின் குட்டி வங்காய குரா!!

  • SHARE
  • FOLLOW
CWC Priyanka Special: மாதம்பட்டியை வாயடைக்க வைத்த பிரியங்காவின் குட்டி வங்காய குரா!!


அந்தவகையில், இந்த வாரம் குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய ஆந்திரா ஸ்டைல் குட்டி வங்காய குரா எப்படி செய்வது என பார்க்கலாம். உங்களுக்கு புரியும் படி கூறினால், ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் கூட்டு. கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வாரம் ஆந்திரா ஸ்டைல் குட்டி வங்காய குரா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Meen kuruma Recipe: இந்த முறை மீன் குழம்பு இல்ல.. மீன் குருமா செய்யுங்க… இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் கத்தரிக்காய் - ¼ கிலோ.
கடுகு - ½ டீஸ்பூன்.
சீரகம் - ½ டீஸ்பூன்.
வெங்காயம் - 1.
தக்காளி - 1.
பச்சை மிளகாய் - 1.
புளி - நெல்லி அளவு.
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.
முழு மல்லி - 1 டீஸ்பூன்.
நிலக்கடலை - 2 டீஸ்பூன்.
எள் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6.
கசகசா - ¼ டீஸ்பூன்.
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்.
பட்டை - 1 துண்டு.
கிராம்பு - 2.

குட்டி வங்காய குரா செய்முறை:

  • இதற்கு முதலில் மசாலா பொடி தயார் செய்ய, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் சேர்க்க வேண்டாம். கடாய் சூடானதும் அதில் முழு மல்லி, நிலக்கடலை, எள், காய்ந்த மிளகாய், கசகசா, தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்.
  • எடுத்து வைத்துள்ள புளியை தண்ணீர் சேர்த்து ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி (புளி கரைசல்) எடுக்கவும்.
  • இப்போது இந்த மசாலா நன்கு ஆறியதும், மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Egg Sandwich: வெறும் 10 நிமிஷம் போதும்… சூப்பரான முட்டை சான்விட்ச் செய்யலாம்!

  • இப்போது எடுத்து வைத்துள்ள கத்தரிக்காயை நன்கு சுத்தம் செய்து, நான்காக கீறி உப்பு சேர்த்து தண்ணீரில் 4 நிமிடம் ஊறவைக்கவும்.
  • இதையடுத்து, அரைத்த மசாலாவை வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் நடுவினில் தடவவும்.
  • இப்போது கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். இப்போது, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர், வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை நன்கு வதக்கி தக்காளி, இஞ்சி,பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பச்சை வாசனை மாறியதும், அதில் மசாலா தடவி வைத்த கத்தரிக்காய், உப்பு சேர்த்து லேசாக பிரட்டி மூடி 5 நிமிடம் மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.
  • கத்தரிக்காய் நன்கு வெந்ததும், மீதமுள்ள மசாலா மற்றும் புளி தண்ணீரை சேர்த்து மூடி வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Poha Nuggets: ஒரு சூப்பரான மொறு மொறு ஸ்னாக்ஸ் அவல் நகெட்ஸ் எப்படி செய்யனும்?

  • கத்தரிக்காய் முழுமையாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில், கொத்தமல்லி இலை தூவி இறக்கினால், குட்டி வங்காய குரா தயார்.

கத்தரிக்காயில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கத்திரிக்காய் பயனுள்ளதாக இருக்கும். கத்தரிக்காயில் பொட்டாசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்துடன் போராடுபவர்களுக்கு நன்மை பயக்கும். பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலில் சோடியத்தின் விளைவைக் குறைக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவும்

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதை உட்கொண்ட பிறகு, உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக உணர்கிறது மற்றும் உங்களுக்கு விரைவில் பசி ஏற்படாது. கூடுதலாக, இது குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது, இது எடையை அதிகரிக்காது.

இந்த பதிவும் உதவலாம் : Breakfast: காலை உணவு அந்த நாளுக்கு ஏன் முக்கியம் தெரியுமா? இதன் முக்கிய காரணம் இங்கே!

இரத்த சர்க்கரை மீது விளைவு

கத்தரிக்காயை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இந்த காய்கறியின் கிளைசெமிக் மதிப்பெண் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எளிதாக சேர்க்கலாம். மேலும், காய்கறியில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

தோலுக்கு நல்லது

கத்தரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும், கத்தரிக்காயில் உள்ள நல்ல அளவு நீர், நச்சுகளை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Dindigul Mutton Biryani: பூஜா செய்து அசத்திய திண்டுக்கல் மட்டன் பிரியாணி.! இப்படி செய்யுங்கள்..

Disclaimer