CWC Priyanka Vellattu Thalakari Preatal Recipe: இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடா விருந்து தலைப்பில் போட்டி நடைபெற்றது. மேலும் இது எலிமினேஷன் வாரம். அதனால் போட்டியும் கடுமையாக இருந்தது.
இதில் மட்டன் சார்ந்த உணவுகள் போட்டியாளர்களுக்கு பிரித்து தரப்பட்டது. அதில் பிரியங்காவிற்கு நல்லி கிடைத்தது. இதை வைத்து வெள்ளாட்டு தலை கறி பிரட்டல் செய்து அசத்தினார். இதனை செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பாராட்டி தள்ளினர். அப்படி இதை எப்படி செய்ய வேண்டும் என்று இங்கே காண்போம்.

வெள்ளாட்டு தலை கறி பிரட்டல் ரெசிபி (Vellattu Thalakari Preatal Recipe)
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3/4 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மட்டன் தலை - 800 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1.50 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி தலை - 1 கைப்பிடி
இதையும் படிங்க: Mutton Milagu Masala: ஆஹா ஓஹேனு பாராட்டு வாங்கிய பூஜா.! மட்டன் மிளகு மசாலா அசத்தல்..
செய்முறை
பிரஷர் குக்கரில், எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த உடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இறைச்சி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். மிதமான தீயில் மட்டனை சிறிது தண்ணீர் சேர்த்து 15-16 விசில் விட்டு வேக வைக்கவும்.
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் முடிக்கவும்.
அவ்வளவு தான் சுவையான வெள்ளாட்டு தலை கறி பிரட்டல் ரெடி.
இதனை சாதத்துடன் சாப்பிடவும்.
Image Source: Freepik