Expert

Meen Semiya: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மீன் சேமியா செய்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Meen Semiya: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மீன் சேமியா செய்வது எப்படி?


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். அந்தவகையில், கடந்த வாரம் தொகுப்பாளினி பிரியங்கா செய்து அசத்திய வேலூர் ஸ்பெஷல் மீன் சேமியா வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Curry Leaf Pepper Chicken: காரசாரமா கறிவேப்பிலை மிளகு சிக்கன் எப்படி செய்யணும் தெரியுமா?

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது).
காய்ந்த மிளகாய் - 3.
இஞ்சி - 2 துண்டு.
பூண்டு - 4 பல்.
சோள மாவு - 1 ஸ்பூன்.
மீன் - 3 துண்டுகள்.
பச்சை மிளகாய் - 1.
தக்காளி - 1 ( நீளமாக நறுக்கியது).
முட்டை - 1.
இடியாப்பம் - 2.
கருவேப்பிலை - 1 கொத்து.
கொத்தமல்லி - 1 கொத்து.
எண்ணெய் - 100 கிராம்.
உப்பு - தேவையான அளவு.

மீன் சேமியா செய்முறை:

இதற்கு முதலில், ஒரு கிண்ணத்தில் 3 காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வெந்நீர் ஊற்றி 5 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர், தண்ணீரை வடிகட்டி அவற்றை மிக்சியில் நன்றாக மை போல அரைக்கவும்.

இப்போது, ஒரு தட்டு எடுத்து அதில் அரைத்து வைத்த மசாலா 2 ஸ்பூன் சேர்க்கவும். பின்னர், அதில் சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், சுத்தம் செய்து வைத்த மீனில் இந்த மசாலாவை தடவவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதை சூடேற்றவும். பின்னர், எண்ணெய் சேர்த்து மீனை நன்றாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Raw Mango Pickle: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் பச்சை மாங்காய் ஊறுகாய் ரெசிபி!

இப்பொழுது, ஒரு அகலமான தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கல் சூடேறியதும், 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 20 நொடி வதக்கவும்.

பின்னர் அவற்றை கொத்து பரோட்டா கொத்துவது போல நன்கு கொத்தவும். அதில் சிறிது உப்பு, அரைத்து வைத்த மசாலா 2 ஸ்பூன், ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மீண்டும் நன்கு கொத்திக்கொள்ளவும்.

பின்னர், இடியாப்பத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து, பொறித்து வைத்த மீனை எடுத்து முள் இல்லாமல் சதை பகுதியை மட்டும் இடியாப்பத்துடன் சேர்த்து கொத்து பரோட்டா கொத்துவது போல நன்றாக கொத்தவும்.

இந்த பதிவும் உதவலாம் : CWC 5 Madhampatty Special: மாதம்பட்டி ஸ்பெஷல் மிளகு தூள் சாதம் நெல்லிக்காய் பச்சடி செய்முறை!

கடைசியாக சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் மனமனக்கும் வேலூர் ஸ்பெஷல் மீன் சேமியா தயார். இந்த வாரம் உங்கள் வீட்டுல உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Soaked Raisins Benefits: ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவது ஆண்களுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer