Mangalore Style Kori Gassi recipe: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். அந்தவகையில், நடிகை சுஜிதா செய்து அசத்திய மங்களூர் ஸ்டைல் கோரி காஸ்ஸி மற்றும் அக்கி ரொட்டி வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Priyanka Special: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மட்டன் நல்லி நிஹாரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
காய்ந்த சிவப்பு மிளகாய் - 8.
சிக்கன் - ½ கிலோ.
இலவங்கப்பட்டை - 20 கிராம்.
கொத்தமல்லி விதை - 2 ஸ்பூன்.
வெந்தயம் - 1/4 ஸ்பூன்.
கடுகு - 1/4 ஸ்பூன்.
சீரகம் - 1/4 ஸ்பூன்.
கருப்பு மிளகு - 10.
கிராம்பு - 4.
தேங்காய் (துருவியது) - 1.1/2 கப்.
கறிவேப்பிலை - 1 கொத்து.
பூண்டு - 5
புளி (ஊறவைத்தது) - சிறிய நெல்லிக்காய் அளவு.
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
பிரியாணி இலை - 1.
பெரிய வெங்காயம் - 3.
தேங்காய் பால் - 1 கப்.
தேங்காய் எண்ணெய் - 200 கிராம்.
தேங்காய் விழுது - 1/2 கப்.
மங்களூர் ஸ்டைல் கோரி காஸ்ஸி செய்முறை:
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி விதை, வெந்தயம், இலவங்கப்பட்டை 3, கடுகு, சீரகம், கருப்பு மிளகு, கிராம்பு, ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது, 5 பல் பூண்டு, 2 சில் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து, ஊறவைத்த புளியை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பின், மசாலா பொருட்கள் ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Nandu Rasam Recipe: உடம்புக்கு தெம்பை சேர்க்கும் நண்டு ரசம்.. இப்படி செஞ்சி பாருங்க…
- இதையடுத்து, ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடேறியதும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் அரைத்து வைத்த மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரை பொறுமையாக வதக்கவும். இதையடுத்து, சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை இதில் சேர்க்கவும்.
- மசாலாவும் சிக்கனும் நன்கு சேரும் வரை நன்கு கலக்கவும். பின், அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- இதையடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் நைசாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி அந்த சிக்கன் கலவையில் சேர்க்கவும். கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மங்களூர் ஸ்டைல் கோரி காஸ்ஸி தயார். இது சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Mutton Varuval Recipe: வெங்காயம் தக்காளி தேவையில்லை… சூப்பரான மட்டன் கிரேவி ரெசிபி இங்கே…
அக்கி ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 250 கிராம்.
பெரிய சைஸ் வெங்காயம் - 1.
தேங்காய் - 2 துண்டு.
பச்சை மிளகாய் - 2.
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்.
சீரகம் - 3/4 டீஸ்பூன்.
கொத்தமல்லி இலை - தேவையான அளவு.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
உப்பு - தேவையான அளவு.
வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
- முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்க்கவும். பின் அதில் சிறியதாக வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்க்கவும். அதில், துருவிய இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை, சிறிது உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது. கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மாவை பிசையவும்.
- இப்போது, ஒரு வாழை இலையை எடுத்து அதில் வெண்ணை தடவி தயார் செய்து வைத்துள்ள மாவை உருண்டையாக பிடித்து வைத்து, வட்ட வடிவில் தடவும்.
இந்த பதிவும் உதவலாம் : Oil Free Fried Rice: ஒரு துளி கூட எண்ணெய் தேவையில்லை… அருமையான சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி இதோ…
- இப்போது தோசை கல்லை சூடு செய்து அதில் சிறிது பட்டர் சேர்த்து, தட்டி வைத்துள்ள ரொட்டியை சேர்த்து சுட்டு எடுத்தால், சுவையான அக்கி ரொட்டி தயார். சூடான அக்கி ரொட்டியில் கோரி காஸ்ஸி சேர்த்து சாப்பிட்டால் அடடா சுவை அள்ளும்.
Pic Courtesy: Freepik