$
Nandu Rasam: பொதுவாக ரசம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் நண்டு ரசம் என்று வரும்போது சொல்லவே தேவையில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் நண்டு ரசன் என்றால், விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும்.
ருசியில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் நண்டு ரசம் சிறந்த பங்கு வகிக்கிறது. சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, உடல் சோர்வு போன்றவற்றை நீக்கும். மேலும் எலும்பு மற்றும் நரம்பு ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய நண்டு ரசத்தை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

நண்டு ரசம் ரெசிபி (Nandu Rasam Recipe)
தேவையான பொருட்கள்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 3 பல்
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
வயல் நண்டு கால் - 15
தண்ணீர் - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
குண்டு மிளகாய் - 2
தக்காளி - 2
மல்லி இலை - 1 கைப்பிடி
செய்முறை
- முதலில் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக்கொள்ளவும்.
- உரலில் மிளகு சீரகம் காயந்த மிளகாய் பூண்டு சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும்
- பின்னர் அதே உரலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும்.
- இதையடுத்து உரலில் வயல் நண்டு கால் சேர்த்து நச்சி எடுத்துக்கவும்.
- தற்போது கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை, குண்டு மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- இதில் மஞ்சள் மற்றும் இடித்து வைத்த மசாலாக்களை சேர்த்து வதக்கும்.

- இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதையடுத்து நச்சி வைத்த நண்டு காலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- தற்போது புளி தண்ணீர் சேர்த்தும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்தும் கலந்து விடவும்.
- ஒரு கொதி வந்த உடன், மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவு தான் ருசியான நண்டு ரசம் ரெடி