Mutton Varuval Without Onion And Tomato: நீங்கள் பேச்சுலரா? இப்போது தான் சமையல் கற்றுக்கொண்டு இருக்கீற்களா? அப்போ அருமையான, ருசியான மட்டன் ரெசிபி ஒன்றை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அது வேறு ஒன்றும் இல்லை. மட்டன் வருவல் தான்.
இதற்கு வெங்காயம் தக்காளி கூட தேவையில்லை. இதனை செய்வது சுலபம். இதன் சுவையும் நம்மை மெய் மறக்கச் செய்யு. வெங்காயம் தக்காளி இல்லாமல், வீட்டிலேயே அருமையான மட்டன் கிரேவி செய்வது எப்படி என்று இங்கே விரிவாக காண்போம்.
முக்கிய கட்டுரைகள்

மட்டன் வருவல் ரெசிபி (Mutton Varuval Recipe)
தேவையான பொருட்கள்
மட்டன் - 500 கிராம்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
என்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லி இலை - 1 கைப்பிடி
செய்முறை
- குக்கரில் 500 கிராம் மட்டன், 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், 1 டேபிள் ஸ்பூம் கரம் மசாலா தூள், 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேத்து கலந்து குக்கரை மூடி வைத்து, மிதமான தீயில் 5 விசில் வரும் வரை விடவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
- தற்போது கடாயில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், 3 ஏலக்காய், 3 கிராம்பு, 1 துண்டு பட்டை, 2 பிரியாணி இலை, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 3 பச்சை மிளகாய், 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

- இதில் வேகவைத்த மட்டனை அப்படியே சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- தண்ணீர் சுண்டும் வரை நன்கு கலக்கவும்.
- இறுதியில் ஒரு கைப்பிடி மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவு தான் வெங்காயம் தக்காளி இல்லாமல், காரமான மற்றும் சுவையான மட்டன் வருவல் ரெடி.
- இதனை சுடசுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.