$
How to make Rajasthani Style Mutton Curry Recipe In Tamil: வார இறுதி என்றாலே தெரு முழுக்க சிக்கன் மற்றும் மட்டன் வாசனை ஊரையே தூக்கும். நாம் பெரும்பாலும் மட்டனை வைத்து, மட்டன் வறுவல், மட்டன் கிரேவி, மட்டன் சுக்கா அல்லது மட்டம் பிரியாணி என ஒரே ரெசிபிக்களை வாரம் வாரம் செய்து நமக்கும் சரி… வீட்டில் உள்ளவர்களுக்கும் சலித்து போயிருக்கும்.
மட்டனை வைத்து ஏதாவது புது ரெசிபி ட்ரை பண்ண நினைப்பவரா நீங்களும் இருந்தால், உங்களுக்கான ஒரு சூப்பர் ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். சிக்கனை விட அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக, ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க உதவுகிறது.
மேலும், ஆட்டின் தலை இறைச்சியை சாப்பிட்டு வந்தால், இதயம் சார்ந்த பிரச்சினை நீங்கும் என கூறப்படுகிறது. இப்படி எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ராஜஸ்தானி ஸ்டைல் கிரேவி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Amla Rasam: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முழு நெல்லிக்காய் ரசம்… எப்படி செய்யணும் தெரியுமா?
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ.
மத்தானியா மிளகாய் - 25.
கடுகு எண்ணெய் - 2 ஸ்பூன்.
பட்டை - 2.
கிராம்பு - 2.
பச்சை ஏலக்காய் - 2.
கருப்பு ஏலக்காய் - 1.
பிரியாணி இலை - 2.
ஜாதிபத்ரி - 2.
ஜாதிக்காய் - 1.
வெங்காயம் - 5 மெல்லியதாக நறுக்கியது.
பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்.
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்.
தனியா தூள் - 2 ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
நெய் - 1 ஸ்பூன்.
அடித்த தயிர் - 1 கப்.
கொத்தமல்லி இலை - சிறிது.
ராஜஸ்தானி ஸ்டைல் கிரேவி செய்முறை :

- முதலில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட மட்டனை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மத்தானியா மிளகாய் மற்றும் தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் ஊறவிடவும். பின்பு விழுதாக அரைக்கவும்.
- கடாயில் கடுகு எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, ஜாதிபத்ரி, ஜாதிக்காய் சேர்க்கவும்.
- பின்பு நறுக்கிய வெங்காயம், மத்தானியா மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Mutton Keema Samosa: மட்டன் வைத்து ஒரு சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக் ரெசிபி.. இதோ செய்முறை!
- பிறகு பூண்டு விழுது, இஞ்சி விழுது சேர்த்து வதக்கி பின்பு மட்டன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- பின்பு அரைத்த மிளகாயை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
- பிறகு தனியா தூள், உப்பு, நெய், அடித்த தயிர் சேர்த்து கலந்துவிடவும். பின்பு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 1 மணிநேரம் வேகவிடவும்.
- கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் ராஜஸ்தானி ஸ்டைல் மட்டன் கறி தயார்.
Pic Courtesy: Freepik