$
Madurai Mutton Kola Urundai Recipe: அசைவம் என்று வந்தாலே மதுரை தான் நினைவிற்கு வரும். குறிப்பாக மட்டன் கோலா உருண்டை என்று வரும் போது, மதுரையில் செய்யும் கோலா உருண்டையின் மணம் தான் நினைவிற்கு வரும். நாவின் சுவை மொட்டுக்களை திறக்கும், மதுரை மட்டன் கோலா உருண்டை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (How To Make Madurai Mutton Kola Urundai)
தேவையான பொருட்கள்
மட்டன் கொத்து - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
பொட்டு கடலை - 1 டீஸ்பூன்
முந்திரி - 4
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 6
இஞ்சி - 1 இன்ச்
ஏலக்காய் - 2
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வறுப்பதற்கு ஏற்ப
இதையும் படிங்க: Sesame Seeds Laddu: எள்ளு லட்டு இப்படி செஞ்சி பாருங்க… ரொம்ப நல்லது.!
செய்முறை
அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வையுங்கள். சரியான அளவு பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அதே அளவுகளைப் பின்பற்றுங்கள், இல்லையெனில் உருண்டை நன்றாக இருக்காது.
ஒரு கடாயில் முதலில் எண்ணெய் சேர்க்கவும்.
அதன் பிறகு பட்டை, பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதையடுத்து சிவப்பு மிளகாய், முந்திரி சேர்த்து வதக்கவும்.
இறுதியாக கடலை மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொடுட்களை தனியாக ஆற விடவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மட்டன் கொத்தை வதக்கவும். தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வதக்கவும்.
தற்போது வதக்கிய மசாலாவை மிக்ஸியில் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
அரைத்த மசாலாவை மட்டனுடன் சேர்த்து உருண்டை பிடித்து கொள்ளவும். இதனை முட்டையில் டிப் செய்து கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை சூடுபடுத்து, உருண்டையை போட்டு பொறிக்கவும். அவ்வளவு தான் வீடே மணக்கக்கூடிய, சுவையான மதுரை மட்டன் கோலா உருண்டை ரெடி.
Image Source: Freepik