How to make beetroot kola urundai: என்னதான் எக்கசக்க ஆரோக்கிய நன்மைகளை பீட்ரூட் கொண்டிருந்தாலும், நம்மில் பலருக்கு பீட்ரூட் பிடிக்காத காய்கறிகளில் ஒன்று. ஆனால், பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதற்கு அடம்பிடித்தால் உங்களுக்கு ஒரு சூப்பர் ரெசிபி பற்றி கூறுகிறோம்.
இனி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பீட்ரூட் வைத்து கோலா உருண்டை செய்து கொடுங்கள், விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் கோலா உருண்டை எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Kongunadu Vellai Chicken Biryani: அருமையான கொங்குநாடு வெள்ள சிக்கன் பிரியாணி.! இப்படி செஞ்சி பாருங்க..
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது).
பச்சை மிளகாய் - 4.
காய்ந்த மிளகாய் - 5.
பொட்டுக் கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்.
பூண்டு - 5 பல்.
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்.
உடைத்த முந்திரி - 10.
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்.
சோம்பு - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி இலை - சிறிதளவு.
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
- முதலில், அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஈர்த்து சூடேற்றவும். இப்போது அதில், வரமிளகாய், பூண்டு, முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவேண்டும்.
- பின்னர், அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
- இதையடுத்து, இஞ்சி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின் பீட்ரூட், தேங்காய், மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
- இப்போது, இதை ஆறவிட்டு மிக்ஸியில் தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Ulavacharu Chicken Biryani: சுஜிதா செய்து அசத்திய உலவச்சாறு சிக்கன் பிரியாணி ரெசிபி..
- அரைத்த கலவையை பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசைந்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் உருட்டி கொள்ளவும்.
- இதையடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டிய உருண்டைகளைப் போட்டு சீராக பொறித்து எடுக்கவும்.
- இதோ, ருசியான பீட்ரூட் கோலா உருண்டை தயார். காரமான சட்னி அல்லது சாஸ்களுடன் இதை பரிமாறவேண்டும்.
பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமானத்தை மேம்படுத்த
பீட்ரூட்டில் அதிக அளவிலான நீரில் கரையும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இது செரிமானத்திற்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
அழற்சியை நீக்க
பீட்ரூட்டில் பீட்டாலைன் என்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. இது நாள்பட்ட அழற்சி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, இது சிறுநீரகத்தில் ஏற்படும் அழற்சியைப் போக்க உதவுகிறது. இதன் மூலம் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Thanjavur Tomato Chutney: எளிமையான முறையில் நொடியில் தயாராகும் தஞ்சாவூர் தக்காளி சட்னி செய்வது எப்படி?
தீக்காயம் குணமாக
இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், சருமத்தில் ஏற்படும் புண், கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்க உதவுகிறது. இது எரிச்சல் மற்றும் வலியை உண்டாக்கும் புண்கள் அல்லது கொப்புளங்களைக் குணப்படுத்த உதவுகிறது. தீக்காயம் ஏற்பட்ட இடங்களில் பீட்ரூட் சாற்றினை தடவி வர அது காயம் உள்ல இடத்தில் கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
நச்சுத்தன்மை நீக்க
பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க முடியும். பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் காணப்படும் நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. எனவே, பீட்ரூஸ் ஜூஸ் அருந்துவது உடல் உறுப்புகளைச் சுத்தமடையச் செய்யும்.
இந்த பதிவும் உதவலாம் : Nattu Kozhi Getti Kulambu: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நாட்டு கோழி கெட்டி குழம்பு..
அல்சர் குணமாக
காரமான உணவுகளை எடுத்துக் கொள்வது அல்லது முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருப்பது அல்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். எனவே, அல்சரால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து அருந்துவது அல்சரை விரைவில் குணமாக்கும்.
இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க
பீட்ரூட்டில் மிக அதிக அளவு வைட்டமின் பி1 மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். மேலும், பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்க சுவையுடனும், ஆரோக்கியம் தருவதாகவும் அமைகிறது.
Pic Courtesy: Freepik