பாரம்பரிய சுவை.. ஆரோக்கியத்திற்கும் சிறந்ததே.. கோலா உருண்டை ரெசிபியும் நன்மைகளும்!

Mutton Kola Urundai: சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் இது சிறந்தது. நம் பாரம்பரிய சமையல் முறையில் உருவாகியுள்ள கோலா உருண்டை, உண்மையில் உடலுக்கும் புத்துணர்வுக்கும் ஏற்ற உணவாகும். இதன் செய்முறை மற்றும் நன்மைகள் குறித்து இங்கே விரிவாக காண்போம். 
  • SHARE
  • FOLLOW
பாரம்பரிய சுவை.. ஆரோக்கியத்திற்கும் சிறந்ததே.. கோலா உருண்டை ரெசிபியும் நன்மைகளும்!


தமிழ்நாட்டின் சமையல்பண்பாட்டு பாரம்பரியத்தில் ஒரு சிறப்பு வகிக்கும் உணவுப்பொருள் “கோலா உருண்டை”. மட்டனும், வாசனை தரும் மசாலா கலவையோடும் சிறப்பாக தயாரிக்கப்படும் இந்த உருண்டைகள், இன்று கூட நம் வீட்டில், சிறப்புப் பண்டிகைகளில் பரிமாறப்படுகின்றன. சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் இது சிறந்தது.

கோலா உருண்டை சாப்பிடுவதன் நன்மைகள்

புரத ஆதாரம்

இது மிகச்சிறந்த புரத சத்து கொண்ட உணவாகும். மட்டன் அல்லது சிக்கன் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுவதால், தசை வளர்ச்சி, ஒட்டுமொத்த உடல் வலிமை ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும்.

செரிமானத்துக்கு உதவுகிறது

இதில் பயன்படுத்தப்படும் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு போன்ற மூலிகைச் சேர்மங்கள், இயற்கையாகவே செரிமான சக்தியை தூண்டும் பணியை செய்கின்றன. உணவுக்குப் பிறகு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கும்.

artical  - 2025-08-07T102014.981

ஆரோக்கிய கொழுப்புச் சத்து

வீட்டிலேயே சமைக்கப்படும் கோலா உருண்டை, நல்ல எண்ணெய் மற்றும் மசாலாக்கள், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு (HDL) அளிக்கின்றது.

இரத்தத்துக்கு வலிமை தரும்

இதில் உள்ள மட்டன் போன்ற இறைச்சி வகைகளில் அதிக அளவு இரும்புசத்து (Iron) இருப்பதால், ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். குறிப்பாக, இரத்தக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாக அமையும்.

உணவிற்கான விருப்பத்தை தூண்டும்

குழந்தைகள் அல்லது வயதானவர்கள் உணவுக்கு விருப்பமில்லாமல் இருக்கும்போது, கோலா உருண்டை போன்ற சுவை மிக்க உணவுகள், அவர்களைக் உணவுக்கு ஈர்க்கும் திறனை கொண்டவை.

மேலும் படிக்க: இட்லிகளுக்கு ராஜா.. காஞ்சிபுரம் கோவில் இட்லி.. சுவையும் ஆரோக்கியமும் சேர்த்த அதிசயம்!

மட்டன் கோலா உருண்டை ரெசிபி (Mutton Kola urundai Recipe)

தேவையான பொருட்கள்

  • நன்றாக சுத்தம் செய்த மட்டன் – 250 கிராம்
  • வெங்காயம் – 2 (நறுக்கவும்)
  • இஞ்சி – 1 இன்ச் துண்டு
  • பூண்டு – 6 பற்கள்
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • கொத்தமல்லி இலையுடன் சிறிது புதினா – பொடியாக நறுக்கவும்
  • பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன் (நன்கு வெந்திருக்க வேண்டும்)

artical  - 2025-08-07T102248.784

செய்முறை

  • முதலில் மட்டனை சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • பாசிப்பருப்பும் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • வேகவைத்த மட்டன் சேர்த்து, தேவையான உப்பு, மிளகுத் தூள், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து நன்கு கெட்டியான மாவாக செய்யவும்.
  • சிறிய உருண்டைகளாக உருட்டி, அடுப்பில் எண்ணெய் காயவைத்து பொன்னிறமாக பொரிக்கவும்.
  • அவ்வளவு தான். கோலா உருண்டை ரெடி. சுட சுட சாப்பிடவும்.

உணவு பாதுகாப்பு

உணவுகள் எப்படிப்பட்ட முறையில் தயாரிக்கப்படுகின்றன என்பதே அதன் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு சக்தியையும் தீர்மானிக்கிறது. கோலா உருண்டை போன்ற பாரம்பரிய உணவுகள் சுத்தமாகவும், சரியான எண்ணெய் அளவில் தயாரிக்கப்படுமானால், அது உடலுக்கு எந்தவித தீங்கும் இல்லை. மாறாக, ஹோட்டலில் அதிக எண்ணெயில் தயார் செய்யப்படும் வகைகளில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் சீரான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

artical  - 2025-08-07T102143.674

எச்சரிக்கை

  • அதிக எண்ணெயில் பொரித்த இதை தினமும் சாப்பிடக்கூடாது.
  • வறுத்த உணவுகள் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாத நிலையில் இது திடீரென உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
  • சிறுநீரக நோயாளிகள், உயர் கொழுப்புச்சத்து உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி அதிகமாக சாப்பிட வேண்டாம்.

சுவையோடும் நலனோடும் கோலா உருண்டை

நம் பாரம்பரிய சமையல் முறையில் உருவாகியுள்ள கோலா உருண்டை, உண்மையில் உடலுக்கும் புத்துணர்வுக்கும் ஏற்ற உணவாகும். இது ஒரு முறை சாப்பாடாக இருந்தாலும், நம்மை உற்சாகமாக வைத்திருக்க வல்லது. ஆனால், எது போலவே இதையும் ஒழுங்கான அளவிலும், முறையான சமயத்தில் சாப்பிடுவதே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் சுவையான பாரம்பரிய உணவுகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகளுக்கு, எங்கள் பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்!


📌 Facebook: https://www.facebook.com/share/1AzLkKmLba/

📌 Instagram: https://www.instagram.com/onlymyhealthtamil/

Read Next

இட்லிகளுக்கு ராஜா.. காஞ்சிபுரம் கோவில் இட்லி.. சுவையும் ஆரோக்கியமும் சேர்த்த அதிசயம்!

Disclaimer