இட்லிகளுக்கு ராஜா.. காஞ்சிபுரம் கோவில் இட்லி.. சுவையும் ஆரோக்கியமும் சேர்த்த அதிசயம்!

பாரம்பரியமான காஞ்சிபுரம் கோவில் இட்லி எப்படி தயாரிக்கப்படுகிறது? இதில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணமுள்ள மூலிகைகள் என்ன? ஆரோக்கிய நன்மைகள் எவை? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம். 
  • SHARE
  • FOLLOW
இட்லிகளுக்கு ராஜா.. காஞ்சிபுரம் கோவில் இட்லி.. சுவையும் ஆரோக்கியமும் சேர்த்த அதிசயம்!


பெருமாள் கோவிலில் பரிமாறப்படும் பழம்பெரும் இட்லியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அது தான் காஞ்சிபுரம் கோவில் இட்லி. அதன் சுவையும், வாசனையும், ஆரோக்கிய நன்மைகளும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அந்த இட்லியின் அதிசயமான பண்புகள், பாரம்பரிய தயாரிப்பு முறைகள் மற்றும் உடலுக்கு தரும் நன்மைகள் பற்றி இங்கே விரிவாக காணலாம்.

காஞ்சிபுரம் இட்லி – ஒரு பாரம்பரிய சமய உணவு!

காஞ்சிபுரம் இட்லி என்பது தெய்வீகமாக கருதப்படும் ஒரு உணவுப் பதார்த்தம். இது பெரும்பாலும் வரதராஜ பெருமாள் கோவிலில் நைவேத்தியமாகவே பரிமாறப்படும். இந்த இட்லியை வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் தேடி வந்து சாப்பிடுவார்கள். அத்தகைய சிறப்பு உணவு இது. குறிப்பாக, இது பத்மனாபசுவாமி கோவிலில் உள்ள நிவேதனமாய் கருதப்படும் வகையிலும் தயாரிக்கப்படுகிறது. வழக்கமான இட்லியைவிட இதன் சுவை தனித்துவமானது.

artical  - 2025-08-06T230842.628

காஞ்புரம் கோவில் இட்லி ரெசிபி (Kanchipuram Kovil Idli Recipe)

தேவையான பொருட்கள்

  • பச்சை அரிசி - 2 கப்
  • உளுந்து - 1 கப்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • இஞ்சி, மஞ்சள் பொடி - சிறிதளவு (விருப்பப்படி)
  • எண்ணெய் - 1 ஸ்பூன் (தட்டில் தடவ)

செய்முறை

  • அரிசியும் உளுந்தும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு இரண்டையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இந்த மாவில் மிளகு, சீரகம், தேங்காய், இஞ்சி துருவல், மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
  • 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • பின்னர், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி வேக வைக்கவும்.
  • இது சுமார் 45 நிமிடம் வேகும்.
  • வெப்பம் குறைந்த பிறகு துண்டாக வெட்டி பரிமாறலாம்.

மேலும் படிக்க: கம்மன் கூழ் vs கேப்பை கூழ்.. எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.? ஆடி மாதத்தில் ஏன் முக்கியம்.?

காஞ்புரம் கோவில் இட்லியின் ஆரோக்கிய நன்மைகள்

செரிமான ஆரோக்கியம்

புளிக்கவைக்கப்படும் மாவு நம்முடைய செரிமானம் சீராகும் வகையில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கேற்ப செய்யப்படுகிறது. சீரகம், மிளகு போன்றவை வயிற்றுக்கு நன்மை தரும்.

உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும்

இந்த இட்லியில் உள்ள மஞ்சள், இஞ்சி, மிளகு போன்றவை உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவும்.

நோய்களை தடுக்கும்

மிளகு, இஞ்சி போன்ற இயற்கை மூலிகைகள் காய்ச்சல், இருமல், சளி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

Main

ஊட்டச்சத்து நிறைந்தது

உளுந்தில் புரதச்சத்து, இரும்புச்சத்து, மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் நிறைந்திருக்கும். தேங்காய், அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் ஆற்றலை அதிகரிக்கும்.

எடையைக் கட்டுப்படுத்தும்

இந்த இட்லி இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டாலே முழுமையாக உணர்வீர்கள். மேலும் இதில் எண்ணெய் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. அதனால் இது வெயிட் லாஸ் விரும்புவோருக்கும் ஏற்றது.

சமய தொடர்பும்.. பாரம்பரியமும்..

காஞ்சிபுரம் கோவில் இட்லி என்பது வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரதராஜ பெருமாள் கோவிலில் தினசரி பூஜைகளில் நைவேதியமாக இது இடம் பெறுகிறது. மேலும், இது பஞ்ச கவ்வியங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இதயத்தில் இடம் பிடித்த இட்லி

இந்த இட்லியின் தனித்துவமான வாசனை, அதன் மூலிகை சேர்க்கைகள் மற்றும் தயாரிக்கும் முறையே தனித்தன்மை தருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இது இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் சிறிய அளவில் உட்கொள்வது சாலச் சிறந்தது. வாயிற்று புண், அல்சர் போன்றவர்கள் மிளகு, இஞ்சி குறைவாக சேர்த்துப் சாப்பிடலாம்.

artical  - 2025-08-06T231715.903

குறிப்பு

காஞ்சிபுரம் இட்லி என்பது வெறும் ஒரு உணவுப் பதார்த்தம் அல்ல. அது தமிழ் பாரம்பரியத்தின் சுவைமிக்க அடையாளம். சைவ சமய வழிபாட்டிலும், கலாச்சாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த உணவாக இது இடம் பெற்றுள்ளது. இன்று, நமக்கு நவீன உணவுகள் எதுவாக இருந்தாலும், இப்படிப்பட்ட பாரம்பரிய உணவுகள் நம் சமயத்தை, நம் உடலையும் பாதுகாக்கும். இட்லி சாப்பிடுறதுல மாசே இல்ல.. ஆனா காஞ்சிபுரம் இட்லி சாப்பிடுறது ஆனந்தமே வேற..

உங்கள் உடல், உங்கள் பொக்கிஷம். பாரம்பரிய உணவுகள் உங்கள் வாழ்நாளை பாதுகாக்கும்!

மேலும் இத்தகைய ஆரோக்கிய தகவல்களுக்கு எங்களது சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:


📌 Facebook: https://www.facebook.com/share/1AzLkKmLba/

📌 Instagram: https://www.instagram.com/onlymyhealthtamil/

Read Next

ஆடி மாத கூழுக்குப் பின்னால் இப்படி ஒரு ரகசியம் இருக்கா? இது தெரிஞ்சா நீங்களும் குடிப்பீங்க

Disclaimer