$
Special Curd Rice by Chef Damu: என்னதான் சிக்கன், பிரியாணி, பரோட்டா, நூடில்ஸ் என பல உணவுகளுக்கு நாம் அடிமையாக இருந்தாலும், காலம் காலமாக அனைவருக்கும் விருப்பமான உணவுகளில் நீங்காத இடம் பிடித்திருப்பது தயிர் சாதம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு கப் கெட்டியான தயிர் சாதத்துடன் சிறிது ஊறுகாய் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால். அப்பப்பா…. சொல்லும் போதே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊறியிருக்கும். வாருங்கள், செஃப் தாமு ஸ்டைலில் சுவையான தயிர் சாதம் எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
பால் - 3 கப்
தயிர் - 1 1/2 மேசைக்கரண்டி
கடுகு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெண்ணெய் - 25 GMs
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி.
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - 2 கிளைகள்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம் : Curd: இவங்க எல்லாம் எந்த சூழ்நிலையிலும் தயிர் சாப்பிடக்கூடாது - ஏன்?
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி பருப்பு, கேரட், மா இங்கி, பச்சை மாம்பழம், பச்சை திராட்சை, உலர் திராட்சை சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர் சாதம் செய்முறை:

- முதலில் ஒரு பெரிய பவுல் எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள வெள்ளை சாதத்தை சேர்க்கவும்.
- இதையடுத்து, அதில் எடுத்து வைத்துள்ள பால் மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது இந்த கிண்ணத்தை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.
- சாதம் சூடானதும், சாதத்தை நன்கு மசிக்கவும். அடுப்பை அனைத்து, மீண்டும் பால் சேர்த்து கலந்து, கைகளால் நன்கு மசிக்கவும்.
- இப்போது அதில், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மீண்டும் கைகளால் பிசையவும். தேவைப்பட்டால், முந்திரி பருப்பு, கேரட், மா இங்கி, பச்சை மாம்பழம், பச்சை திராட்சை, உலர் திராட்சை சேர்த்துக்கொள்ளலாம்.
- இப்போது இதில் எடுத்து வைத்துள்ள வெண்ணெயை சேர்த்து நன்கு மசிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : மீண்டும் கேட்கத் தூண்டும் தேங்காய் பால் புலாவ் ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க
- இதையடுத்து அடுப்பை பற்றவைத்து, ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயம் சேர்க்கவும். பின், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடைசியாக முந்திரி பருப்பு சேர்க்கவும். முந்திரி சிறிது வறுபட்டதும், தாளிப்பை தயிர் சாதத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். பின், தயிர் சேர்த்து கலந்தால் சுவையான தயிர் சாதம் தயார்.
தயிர் சாதம் சாப்பிடுவதன் நன்மைகள்:

நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்
தொடர்ந்து தயிர் சாதம் சாப்பிட்டு வந்தால் நோய்களில் இருந்து காத்துக் கொள்ளலாம். உண்மையில், தயிர் சாதம் சாப்பிடுவது நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், உங்கள் செரிமான அமைப்பு மற்றும் குடலைப் பாதுகாப்பாக வைக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயிர் சாதம் ஒரு சிறந்த வழி. தயிரில் உள்ள புரோபயாடிக் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் கலவையை மேம்படுத்துகிறது. புரோபயாடிக்குகள் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு உதவுவதோடு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Pineapple Biryani: சுவையான பைனாப்பிள் தம் பிரியாணி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும்
தயிரில் நல்ல அளவு கால்சியம் உள்ளது. இது உங்கள் எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்நிலையில் தயிர் சாதம் சாப்பிடுவது உங்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவும்.
எடை மேலாண்மைக்கு உதவும்
உங்கள் எடையை பராமரிக்க விரும்பினால், தயிர் சாதம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. தயிரில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் உள்ளடக்கம் பசியைக் கட்டுப்படுத்துகிறது, இது எடையைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : சர்க்கரை நோயாளிகளின் நலன் காக்கும் கோவக்காய் சாதம்… ரெசிபி இதோ!
ஊட்டச்சத்து நிறைந்தது
அரிசி மற்றும் தயிர் சேர்த்து ஒரு சுவையான மற்றும் இலகுவான உணவை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தயிரில் உள்ள புரதம் தசைகளை பலப்படுத்துகிறது. மேலும், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது.
அதே நேரத்தில், புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக்குகின்றன. அரிசியில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் ஊக்கத்தை அளிக்கின்றன, தயிர் சாதத்தை ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மாற்றுகிறது.
Pic Courtesy: Freepik