Tasty Pineapple Mutton Biryani: நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்பவும் மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா?
அப்போ இந்த முறை அன்னாசி பழத்தை வைத்து சுவையான ஹோட்டல் ஸ்டைலில் பிரியாணி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்க சமையல் திறமையை பார்த்து அசந்து போய்விடுவார்கள். வாருங்கள், குக்கரில் பைனாப்பிள் பிரியாணி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : எப்போது கனமான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மிலி).
நெய் - தேவையான அளவு.
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி .
முந்திரி பருப்பு - 1/2 கப்.
பாதாம் - 1/2 கப்.
உலர்ந்த திராட்சை - 1/4 கப்.
வெங்காயம் - 1 கப் நீளவாக்கில் நறுக்கியது.
பட்டை - 4 துண்டு.
கிராம்பு - 6.
பச்சை ஏலக்காய் - 4.
கருப்பு ஏலக்காய் - 2.
பிரியாணி இலை - 2.
சோம்பு - 1/2 தேக்கரண்டி.
ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி.
சூடு தண்ணீர் - 2 கப்.
குங்குமப்பூ பால் - சிறிது.
மாதுளை பழம் - சிறிது.
அன்னாசி பழம் - 100 கிராம்.
பைனாப்பிள் பிரியாணி செய்முறை:

- ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
- ஒரு பானில் நெய் ஊற்றி, நெய் உருகியதும், முந்திரி, பாதாம், திராட்சை இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
- ஒரு பானில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்த்து மொறுமொறுப்பாக வறுக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி, நெய் உருகியதும், பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, ஷாஹி ஜீரா, ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Curd: இவங்க எல்லாம் எந்த சூழ்நிலையிலும் தயிர் சாப்பிடக்கூடாது - ஏன்?
- அடுத்து ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும்.
- பின்பு சூடு தண்ணீரை சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு உப்பு, குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து விட்டு, 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
- அடுத்து வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் வெங்காயத்தை மேலே தூவவும்.
- பரிமாறுவதற்கு முன்பாக மேலே மாதுளை பழம், அன்னாசி பழம் இவற்றை தூவி பரிமாறவும்.
அன்னாசி பழம் சாப்பிடுவதன் நன்மைகள்:

எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அன்னாசி இதற்கு சிறந்த பழமாகும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது எடை இழப்புக்கு ஏற்றது. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும், உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான உணவைத் தவிர்க்கவும் உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்க
அன்னாசிப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் உற்பத்தியைத் தடுக்க இது உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : சர்க்கரை நோயாளிகளின் நலன் காக்கும் கோவக்காய் சாதம்… ரெசிபி இதோ!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அன்னாசிப்பழத்தில் மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டும் நல்ல அளவில் உள்ளது. மாங்கனீசு ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது வளர்சிதை மாற்ற செயல்பாடு மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.
செரிமானத்தை மேம்படுத்தும்
அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் புரதங்களை உடைக்க உதவுகிறது. அதிக நார்ச்சத்து மற்றும் அதிக நீர்ச்சத்து காரணமாக, அன்னாசிப்பழம் சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : மீண்டும் கேட்கத் தூண்டும் தேங்காய் பால் புலாவ் ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்
அன்னாசிப்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த சத்துக்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களான கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும். இது பக்கவாதம் மற்றும் சிறுநீரக கல் உருவாவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.
Pic Courtesy: Freepik