How to make pulao with coconut milk: பல வகையான நான்வெஜ் ரெசிபிகள் இருந்தாலும், சிலர் வெஜ் ரெசிபிகளுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு சுவையான, ஆரோக்கியமான தேங்காய்ப்பால் புலாவ் ரெசிபியை வீடுகளிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம்.
இது பிரியாணி சுவையிலேயே இருந்தாலும், பிரியாணி செய்யும் முறையில் இருந்து கொஞ்சம் மாறுபட்ட ஒன்றாகும். இதற்கு ரைத்தா மட்டும் கூட போதுமானதாகும். இவை சுவையான தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை குறித்தும், தேங்காய்ப்பால் தரும் நன்மைகள் குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Coconut Water: தேங்காய் தண்ணீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?
தேங்காய் பால் புலாவ் செய்முறை
தேவையான பொருள்கள்
- பாஸ்மதி அரிசி – ஒரு கப்
- தேங்காய்ப் பால் – 2 1/2 கப்
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
- கேரட் – ஒரு கப் (துண்டுகளாக நறுக்கப்பட்டது)
- பச்சைப் பட்டாணி – கால் கப்
- இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
- நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- முந்திரி துண்டுகள் – உடைத்தது
- உப்பு – தேவையான அளவு

செய்முறை
- தேங்காய் பால் புலாவ் ரெசிபி தயார் செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
- பிறகு, அடுப்பில் தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் அரிசியை சேர்த்து வேகவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவேண்டும்.
- இதை ஒரு தட்டில் வைத்து ஆறவைத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தேங்காயை உணவில் எப்படி எல்லாம் சேர்க்கலாம் தெரியுமா?
- அதன் பிறகு, ஒரு பாத்திரம் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, அதில் சீரகம் சேர்க்க வேண்டும். பின் அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கலாம்.
- பின்னர், பச்சை மிளகாய், கேரட். பட்டாணி போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- பிறகு இதில் தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும்.
- பின் அதில் மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கலாம்.
- அதன் பின், ஆறவைத்த சாதத்தை அந்தக் கலவையில் சேர்த்து கிளறி, உடைத்த முந்திரியை வறுத்து அதை சாதத்தில் தூவி பரிமாறலாம்.
- இப்போது சூப்பரான, சுவையான தேங்காய்ப்பால் புலாவ் ரெசிபி தயாரானது.

தேங்காய் பால் தரும் நன்மைகள்
- தேங்காய் பாலில் வைட்டமின்கள் பி1, பி3, பி5, சி, ஈ, இரும்பு, செலினியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
- தேங்காய் பாலில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கல்லைத் தடுக்கிறது. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும், நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
- தேங்காய் பாலில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், எச்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. கூடுதலாக இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
- இந்த பாலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. மேலும் இது கீல்வாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேஎறு உடல்நலப் பிரச்சனைகளைக் குறைக்கிறது.
- இதில் உள்ள லாரிக் அமிலம், சருமத்தை ஈரப்பதமாக்கவும் வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, ஈ போன்றவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. கூடுதலாக, இதன் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது.
இவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தரும் தேங்காய் பாலை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: புரட்டாசி ஞாயிறு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் அருமையான பனீர் பட்டர் மசாலா! இப்படி செய்யுங்க
Image Source: Freepik