Godhumai payasam: அமிர்தத்தை மிஞ்சும் சுவையில் ஹெல்த்தியான கோதுமை பாயாசம் ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க

How to make wheat payasam: இன்று அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய பிரபலமான இனிப்பு உணவுகளில் பாயாசமும் ஒன்று. இந்த இனிப்பான பாயாசத்தை ஆரோக்கியமான முறையில் மாற்ற விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாக கோதுமை பாயாசத்தைத் தயார் செய்யலாம். இதில் கோதுமை பாயாசம் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்யும் முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Godhumai payasam: அமிர்தத்தை மிஞ்சும் சுவையில் ஹெல்த்தியான கோதுமை பாயாசம் ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க

How to make godhumai payasam recipe: இனிப்பு உணவுகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இனிப்பு சார்ந்த உணவுகளில் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். குறிப்பாக விஷேச நாள்கள் வந்துவிட்டாலே, வீடுகளில் இனிப்பு தான் பிரதான உணவாக அமைகிறது. அதிலும் இனிப்புகளில் மிகவும் பிரபலமான ரெசிபியாக பாயாசம் அமைகிறது. பெரும்பாலும் பாயாசமானது சேமியா, ரவை அல்லது பருப்பு போன்ற பல்வேறு பொருள்களிலிருந்து தயார் செய்யப்படுகிறது.

ஆனால் இதை சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமான வழியிலும் கோதுமையைக் கொண்டு தயார் செய்யலாம். கோதுமை பாயாசம் தித்திக்கும் சுவையில் ஆரோக்கியமான வழியில் வெல்லத்தைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதில் கோதுமை பாயாசத்தைத் தயார் செய்வதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் கோதுமை பாயாசம் செய்யும் முறையைக் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Godhumai Idiyappam: சுவை மட்டும் இல்லங்க.. ஆரோக்கியமும் முக்கியம்.. கோதுமை இடியாப்பம் தெரியுமா.?

கோதுமை பாயாசம் செய்யும் முறை

தேவையான பொருள்கள்

  • உடைத்த கோதுமை - ஒரு கப்
  • துருவிய தேங்காய் - ஒரு கப்
  • வெல்லம் - ஒரு கப்
  • பாதாம் - 20
  • பிஸ்தா - 20
  • உலர் திராட்சை - 20
  • பால் - 2 லிட்டர்
  • நெய் - 5 டீஸ்பூன்
  • ஏலக்காய் - 7 முதல் 9

கோதுமை பாயாசம் செய்முறை

  • பாயாசம் செய்வதற்கு முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு, மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லத்தைச் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ளலாம். பின்னர், இதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது குக்கரில் கோதுமையை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை 5 அல்லது 6 விசில் வரும் வரை வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு, வேக வைத்த கோதுமையை கொதிக்கும் பாலில் போட்டு நன்கு கொதிக்க விடலாம்.
  • இந்த பாலை நன்கு வற்றி பாதியளவு வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.
  • பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும். நெய் சூடான பிறகு அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு சிவப்பாக வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Wheat Rava Kesari: வெறும் ஒரு கப் சம்பா ரவை இருந்தா போதும் சுவையான கேசரி செய்யலாம்!

  • பிறகு, இதில் பாதாம், பிஸ்தா சேர்த்து வறுத்து, நன்கு சிவந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு கிஸ்மிஸை போட்டு வறுக்க வேண்டும்.
  • இதில் கொதிக்கும் கோதுமை கலவையில் வெல்லத்தை ஊற்றி கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதில் வறுத்த தேங்காய், பாதாமை சேர்த்து இறக்கி விடலாம்.
  • இப்போது அசத்தலான மற்றும் சுவையான கோதுமை பாயாசம் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவர்.

கோதுமை பாயாசம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோதுமை பாயாசம் புரதம், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

  • உடைந்த கோதுமையானது மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த ஒரு முழு தானியமாகும். இது எடையிழப்புக்கு ஒரு சிறந்த மற்றும் சுவையான தேர்வாகும்.
  • இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • மேலும் இதில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை எலும்பை வலுவாக்கவும், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
  • சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவுக்கு இது ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Ragi Roti: கிடுகிடுனு வெயிட்டு குறைய.. காலை உணவாக ராகி ரொட்டி சாப்பிடவும்..

Image Source: Freepik

Read Next

Immune System: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த சிவப்பு நிற பழங்களை சாப்பிடுங்க!

Disclaimer