Godhumai Idiyappam: சுவை மட்டும் இல்லங்க.. ஆரோக்கியமும் முக்கியம்.. கோதுமை இடியாப்பம் தெரியுமா.?

  • SHARE
  • FOLLOW
Godhumai Idiyappam: சுவை மட்டும் இல்லங்க.. ஆரோக்கியமும் முக்கியம்.. கோதுமை இடியாப்பம் தெரியுமா.?


Godhumai Idiyappam Recipe: பொதுவாக அரிசி மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடுவார்கள். இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இதில் அதிக சத்துக்கள் உள்ளது. நமக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் கூட இடியாப்பம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படும். 

ஆனால் சுவையுடம் ஆரோக்கியம் என்று வரும் போது, அரிசி மாவை விட கோதுமை மாவில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரிசி மாவு எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. அதுவும் நீரிழிவு நோய் என்று வரும் போது, இது சற்று ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. ஆகையால் அரிசி மாவுக்கு மாற்றாக கோதுமை மாவை பயன்படுத்தலாம். 

அரிசி மாவு இடியாப்பத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? 

அரிசி மாவில் இடியாப்பம் செய்து சாப்பிட்டுவது நல்லது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இதில் உள்ள கார்போஹைட்ரேட், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இவர்கள், அரிசி மாவுக்கு பதிலாக, கோதுமை மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். 

மேலும் உடல் எடை அதிகமாக உள்ளது என்று நினைப்பவர்கள், அரிசி சார்ந்த தயாரிப்புகளை தவிர்ப்பது நல்லது. இவர்களும் கோதுமை மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 

கோதுமை மாவில் இடியாப்பம் செய்வது எப்படி?

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார்வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். இந்த கோதுமை இடியாப்பத்தை எப்படி செய்வது என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

தண்ணீர் 1 - கப்

மஞ்சள் தூள்- 1 சிட்டிகை

நல்லெண்ணெய் - டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இதையும் படிங்க: Weight Loss: கோதுமை சாப்பிடுவதை நிறுத்தினால் உடல் எடையை குறைக்க உதவுமா?

கோதுமை இடியாப்பம் செய்முறை

* முதலில் அடுப்பில் கடாயை சூடுபடுத்தி, அதில் கோதுமை மாவை வறுத்து எடுத்துக்கொள்ளவும். தீ மிதமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் மாவு கருகி விடும். 

* மாவின் நிறமும் மனமும் சிறிது மாறிய உடல் அடுப்பை அணைத்து, மாவை தனி பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். 

* இந்நிலையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், நல்லெண்ணெய், உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 

* தண்ணீர் கொதித்த உடன், அதனை கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் சேர்த்து கலக்கவும். இது சூடாக இருக்கும் என்பதால் கரண்டி அல்லது ஸ்பூனை பயன்படுத்தவும். 

* சற்று ஆறியவுடன், கை கொண்டு மாவை பிசைந்து எடுத்துக்கொள்ளவும். மாவு பதத்திற்கு வந்ததும், 15 நிமிடங்களுக்கு ஊற விடவும். 

* இப்போது அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். மேலும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி வைத்துக்கொள்ளவும். 

* தற்போது இடியாப்பம் அச்சியில் உதவியுடன், இட்லி தட்டில் மாவை பிழிந்து விடவும். 

* அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்தால், சுவையான கோதுமை இடியாப்பம் ரெடி.

இப்படி சாப்பிடுங்க..

* இந்த கோதுமை இடியாப்பத்துடன் தேங்காய் பால் அல்லது வெல்லம் கலந்த பால் சேர்த்து சாப்பிடலாம். 

* துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கோதுமை இடியாப்பத்துடன் கலந்து சாப்பிடலாம். 

* கோதுமை இடியாப்பத்துடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். ஆனால் மிதமான அளவு முக்கியம். (இதனை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்)

* இந்த இடியாப்பத்தை கடலை குருமாவுடன் சாப்பிடலாம். 

* கோதுமை இடியாப்பத்தை காய்கறி குருமாவுடன் கலந்து சாப்பிடலாம். 

பின் குறிப்பு

நாம் எதில் இடியாப்பம் செய்து சாப்பிடுகிறோம் என்பதை விட, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கோதுமை இடியாப்பம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற கதையாகிவிடும். ஆகையால் பகுதிக்கட்டுப்பாடு அவசியம். 

Read Next

Fruits for Weight Loss: பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

Disclaimer

குறிச்சொற்கள்