Benefits of Consuming Fruits Daily: தினமும் ஏதாவது ஒரு பலம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால், ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பழங்களில் காணப்படுகின்றன. தினமும் பழங்களை உட்கொள்வது, நாம் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.
பெரும்பாலானோர், பழம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்று நம்புகிறார்கள். பழங்களில் உள்ள இயற்கையான இனிப்பு, உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது. இது எடை அதிகரிக்க வழிவகுக்கிறது என நம்புகின்றனர். இது உண்மையா? இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரே தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் :
பழம் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு கட்டுக்கதை மட்டுமே. அதேசமயம், பழங்களை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். பழங்களில் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், பழங்கள் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை. இவை நம்மை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். எனவே, அடுத்த உணவில் நீங்கள் குறைவான கலோரிகளை உட்கொள்கிறீர்கள். அவற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
தினமும் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
வாழைப்பழம், பட்டர் ஃப்ரூட், ஆரஞ்சு ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க அவசியம். கூடுதலாக, அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளன, இது எடை இழப்புக்கு உதவுகிறது.
உடல் நீரேற்றமாக இருக்கும்
கனிமங்களுடன், பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்தும் உள்ளது. இவற்றை உட்கொள்வதால், உடலை நீரேற்றமாக வைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கும்

பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. அவற்றில் காணப்படும் அத்தியாவசிய வைட்டமின்களும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பழங்களில் மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. எனவே, அன்றாட உணவில் பழங்களைச் சேர்த்துக் கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.
செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்
பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. இவற்றை உட்கொள்வதால் மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது, மேலும் செரிமானத்தை துரிதப்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் இரண்டு வெவ்வேறு பழங்களை சாப்பிடுவது சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
Pic Courtesy: Freepik