Side effects of eating too much fruits: பொதுவாக, அன்றாட வாழ்வில் சில பழங்களை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. குறிப்பாக, உடல் எடையைக் குறைப்பதற்கு நிபுணர் பலரும் பல்வேறு டயட் முறைகளில் பழங்களை உட்கொள்ள அறிவுறுத்துகின்றனர். பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பழங்களை மட்டுமே சாப்பிடுவது ஆரோக்கியமானது எனக் கருதுகிறீர்களா? ஆம். பலரும் பழங்களைத் தவறான வழியில் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் அதிகம் உட்கொள்வதும் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
பழங்கள் பொதுவான ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதை நாம் விரும்பும் அளவுக்கு அவற்றை உட்கொள்ளலாம் என்று அர்த்தமல்ல. தினசரி பழங்களை உட்கொள்வதைப் பொறுத்தவரை, அவற்றின் அளவு மற்றும் வகைகள் குறித்து கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலும் அவர்கள் சொல்வது போல், எதையும் அதிகமாக சாப்பிடுவது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். அதாவது பழங்களுடன் சேர்த்து சாப்பிடும் எதையும் மிதமான அளவில் சாப்பிட வேண்டும்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தாய்மை மருத்துவமனையின் ஆலோசகர் - உணவியல் நிபுணர்/ஊட்டச்சத்து நிபுணர் ஹரி லட்சுமி அவர்கள் பழங்களை அத்கியம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Fruits for Weight Loss: பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!
அதிகமாக பழங்களை சாப்பிடுவது ஏன் தீங்கு விளைவிக்கும் தெரியுமா?
பொதுவாக, பழங்களின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நாம் பலரும் அறிந்ததே. இவை வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இவை ஆரோக்கியமான உணவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மேலும் இது பல நாள்பட்ட நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
நல்ல செரிமானத்திற்கு, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என்பது அறிந்ததே. ஆனால், பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நிறைய பழங்களை சாப்பிடும் போது ஏற்படும் சில பக்க விளைவுகளில் ஒன்றாக அஜீரணம் ஏற்படுவது அடங்கும். இது வீக்கம், வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இன்னும் பிற அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். எனவே நாம் உட்கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
பழங்களை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் சில பக்க விளைவுகள்
எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் இதய ஆரோக்கியம்
பெரும்பாலான பழங்களில் அதிகப்படியான பிரக்டோஸை எடுத்துக் கொள்கிறோம். இவை உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். இது உடலில் கொழுப்பு குவிப்புக்கு வழிவகுக்கிறது. இது குளுக்கோஸ் சகிப்புத்தன்மையையும் உடலின் இயல்பான செயல்பாட்டையும் சீர்குலைக்கிறது. மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் யூரிக் அமில அளவுகளையும் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: When To Eat Fruits: ஒரு நாளைக்கு எத்தனை முறை பழங்கள் சாப்பிட வேண்டும்?
பழம் சார்ந்த உணவு அபாயங்கள்
பொதுவாக, பழங்களை பச்சையாக உட்கொள்கிறோம். ஆனால், இந்த உணவுமுறை முழு தானியங்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற வேறு எந்த உணவுக் குழுக்களையும் தடை செய்கிறது. இந்த உணவு முறையானது சில காய்கறிகள், கொட்டைகள் மற்றும் விதைகளை மட்டுமே அனுமதிக்கிறது. பழ உணவில் புரதம், வைட்டமின் பி, கால்சியம், வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.
செரிமான பிரச்சனைகள்
அதிகளவு பிரக்டோஸ் உட்கொள்ளல் காரணமாக பெரும்பாலும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. இது வயிற்று வலி, வீக்கம், அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை குடல் நோய்க்குறியின் அறிகுறிகளாகும். இந்த நோயைக் கடக்க சிறந்த வழிகளில் ஒன்றாக குறைந்த பிரக்டோஸ் உணவை உட்கொள்ள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு பயணத்தில் இந்த பழங்கள் சாப்பிடவேக்கூடாது.!
Image Source: Freepik