Which Fruits Should Be Avoided For Weight Loss: இன்று பலரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறையால் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர். இதற்கு உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற தூக்கம் போன்றவையே காரணமாகும். இவை அனைத்திற்கும் பொதுவாக இருப்பது உணவுமுறையே ஆகும். எனவே, நாள்தோறும் சாப்பிடும் உணவு, நேரம் போன்ற அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
எடை குறைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் பழங்கள்
பெரும்பாலானோர் பழங்களை மிகவும் சத்தானவை என்று கூறுவதை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக எடை குறைப்பில் பழங்கள் மிகுந்த நன்மை பயக்கும் எனக் கூறுவர். ஆனால் இது சரியானது அல்ல. சில பழங்கள் அதிகளவிலான சர்க்கரையைக் கொண்டிருக்கும். இது தினசரி கலோரிகளை அளவுகளை அதிகரிக்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
எனவே எந்தவொரு பழங்களைத் தேர்ந்தெடுக்கும் முன் அதன் ஊட்டச்சத்து மதிப்பைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தேர்ந்தெடுப்பது அவசியமாகும். அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க சில பழங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Masoor Dal For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க
உடல் எடை குறைய தவிர்க்க வேண்டிய பழங்கள்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சில பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அன்னாச்சிப்பழம்
அன்னாச்சிப்பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பழமாகும். ஆனால், இதில் அதிகளவிலான சர்க்கரை நிறைந்துள்ளது. இதன் இயற்கை சர்க்கரைகள், உடலில் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கலாம். இவை எடை இழப்பு இலக்குகளைப் பாதிக்கலாம். எனவே இதை அளவோடு உட்கொள்வது நல்லது.
வாழைப்பழங்கள்
பழ வகைகளில் பெரும்பாலானோர் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் ஆகும். இதன் பல்வேறு பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. எனினும், மற்ற பழங்களை விட இதில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. எனவே வாழைப்பழங்களை மிதமாக உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதன் அதிகப்படியான நுகர்வு கலோரி உட்கொள்ளலை அதிகமாக்கும். இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உலர்ந்த பழங்கள்
உலர்ந்த பழங்கள், திராட்சை, பேரீச்சம்பழம், ஆப்ரிகாட் போன்றவை கலோரிகள் நிறைந்த பழங்களாகும். சிறிய, கலோரி அடர்த்தியான சிற்றுண்டியை எடுத்துச் செல்வது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பினும், இதன் அதிக கலோரி உடல் எடை குறைப்பைப் பாதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Okra Water for Weight Loss: எப்பேற்பட்ட தொப்பையையும் குறைக்க உதவும் வெண்டைக்காய் நீர். இப்படி குடிச்சி பாருங்க
அவகேடோ
அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பழமாகும். எனினும் இது அதிகளவு கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே வெண்ணெய் பழங்களை மிதமாக உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். எடை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் இந்த பழங்கள் எடுத்துக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
மாம்பழம்
மாம்பழம் என்றாலே பலரும் விரும்பி எடுத்துக் கொள்ளும் பழங்களில் ஒன்றாகும். எனினும் இதில் அதிகளவு சர்க்கரை உள்ளடக்கம் நிறைந்துள்ளது. இது அதிக கலோரி நுகர்வுக்கு பங்களிப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தவிர்ப்பது நல்லது. எனவே மிதமான அளவில் மாம்பழங்களை உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.
செர்ரிஸ்
செர்ரிகள் சுவையான பழங்கள் மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவையாகும். எனினும், இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கும் இயற்கையான சர்க்கரைகளைக் கொண்டுள்ளது. செர்ரிகளைச் சாப்பிடுவதில் பகுதிக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது நல்லது.
இந்த பழங்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருப்பினும், இதன் அதிகப்படியான நுகர்வு உடல் எடை இழப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் இந்த பழங்களை மிதமான அளவில் உட்கொள்ளலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இது ஒன்னு மட்டும் சாப்பிடுங்க. நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு வெயிட் குறையும்
Image Source: Freepik