Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Weight Loss Fruits: இந்த சம்மர்ல வேகமாக எடையை குறைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

Hydrating Fruits That Promote Weight Loss: மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகமாகி பலரும் பல நோய்களை சந்தித்து வருகின்றனர். இந்த அதிக உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். உடல் எடை குறைப்பிற்கான முக்கிய மற்றும் சிறந்த தேர்வாக அமைவது உணவுமுறையைக் கையாள்வதாகும். ஆரோக்கியமான, குறைந்த கொழுப்பு கொண்ட உணவுமுறைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சீரான உடல் எடையை பராமரிக்கலாம்.

குளிர்காலத்துடன் ஒப்பிடுகையில் கோடைக்காலம் உடல் எடையைக் குறைக்க சரியான நேரம் ஆகும். ஏனெனில், இந்த காலத்தில் உத்வேகமாக செயல்படுவர். கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க நீர்ச்சத்து மிக்க பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த பழங்களில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாக இருக்க வேண்டும். இதில் உடல் எடையைக் குறைக்க உதவும் கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய நீரேற்றம் மிகுந்த ஐந்து பழங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sabja Seeds: மடமடனு எடை குறையணுமா? சப்ஜா விதைகளை இப்படி சாப்பிடுங்க

உடல் எடை குறைக்க உதவும் நீரேற்றம் மிகுந்த பழங்கள்

கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியமாகும். இதில் உடல் எடை குறைய உதவும் நீரேற்றம் மிகுந்த பழங்களைக் காணலாம்.

வெள்ளரிக்காய்

இது சுவையான மற்றும் மொறுமொறுப்பான கோடைக்கால நீரேற்றம் மிகுந்த பழமாகும். இதனை உணவில் சாலட் அல்லது ஸ்மூத்தி போன்ற பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பச்சை பழங்களில் இயற்கையான குளிர்ச்சி பண்புகள் நிறைந்துள்ளன. இவை நீர்ப்போக்கு மற்றும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. வெள்ளரி 95% தண்ணீர் மற்றும் மிகக் குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது. இது நீண்ட நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுவதுடன், உடலை நச்சுத்தன்மையாக்கி சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்கிறது. இதன் பண்புகள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

தர்பூசணி

இது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய இனிப்பு மற்றும் குளிர்ச்சி மிக்க கோடைக்கால பழமாகும். இது 92% நீரால் ஆனது. கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தைத் தணித்து, உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைத் தரக்கூடிய சிறப்பு பழமாகும். இதில் உள்ள நீர்ச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை பசியைக் குறைக்கிறது. கூடுதலாக இதில் பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

பீச் பழம்

இது ஒரு சிறந்த குறைந்த கலோரிகள் நிறைந்த மற்றும் உணவுக்கு இடையில் சாப்பிட்டக்கூடிய சிற்றுண்டி வகை பழமாகும். இது சர்க்கரை உணவுகளுக்கான ஏக்கத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமற்ற உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் உதவுகிறது. பீச் பழத்தில் 89% நீர் மற்றும் அதிக நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. உணவுக்கு இடையில் இந்த பழத்தை எடுத்துக் கொள்வது நீண்ட நேரம் முழுமை உணர்வைத் தந்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இந்த பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, சி, இரும்பு, துத்தநாகம் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Lose Fat Naturally: கட கடன்னு உடல் எடையை குறைக்க எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்க!

முலாம்பழம்

முலாம்பழம் நீர்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த பழமாகும். மேலும், இது குறைந்தளவு கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்ததாகும். இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. உடல் எடையைக் குறைக்க கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த பழமாகும். முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி, கே, சி, தாமிரம், துத்தநாகம் மற்றும் இன்னும் பிற கனிமங்கள் நிறைந்துள்ளது. இந்த பழத்தை எடுத்துக் கொள்வது பார்வைத் திறனை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழ வகைகளில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, கே, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது தவிர, இந்த பழத்தில் 88 சதவீதம் தண்ணீர் மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழத்தை அருந்துவது நீண்ட நேரம் முழுமையான உணர்வைத் தருகிறது. மேலும் இது கோடை வெப்பத்தை வெல்ல உதவுகிறது. குறிப்பாக, இதில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் கோடை காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பை குறைக்க உதவுகிறது.

இந்த கோடைக்கால பழங்களை உட்கொள்வது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடல் எடையை எளிதில் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Fenugreek Leaves: தொங்கும் தொப்பையை குறைக்க இந்த ஒரு கீரை போதும்!!

Image Source: Freepik

Read Next

Exercise for weight loss: வீட்டிலேயே இந்த 3 உடற்பயிற்சிகளை செய்தால் போதும் வெறும் 15 நாளில் ஒல்லியாகலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content