
$
Full Body Workout in Tamil: செயலற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் மூன்றில் ஒருவர் உடல் எடை பிரச்சினையை சந்துத்து வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு வாரம் நன்றாக சாப்பிட்டால் போதும் உடல் எடையை ரலிமையாக அதிகரிக்கலாம். ஆனால், அதிகரித்த உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயம்.
உடல் எடையை குறைக்க நம்மில் பலர் ஜிம்மிற்கு செல்வோம். ஆனால், வீட்டிலேயே வெறும் 15 நாட்களில் எளிமையாக உங்கள் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான். இந்த மூன்று எளிமையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கலாம். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எடை அதிகரிப்பு மட்டும் அல்ல, நீங்கள் முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றாழும் இந்த 3 எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம். இதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இன்னும் சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த பயிற்சிகள் உங்கள் முழு உடலையும் செயல்படுத்துகிறது. இதனால், உடலின் அனைத்து பகுதியில் உள்ள கொழுப்பும் குறையும். இதனால், வெறும் 15 நாட்களில் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : உடற்பயிற்சி செய்வதை திடீரென நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
தலை முதல் கால் வரை தொடுதல் உடற்பயிற்சி (Rotating Toe Touches)

இந்த உடற்பயிற்சி உங்கள் முழு உடலையும் செயல்பட வைக்கும். இதனால், உடலில் உள்ள அனைத்து தசைகளும் வலுவடையும். இதை எப்படி செய்வது என பார்க்கலாம்.
- இதற்கு முதலில் நேராக நிற்கவும், கால்களை சற்று அகற்றி வைக்கவும்.
- உங்கள் கைகள் இரண்டையும் உங்கள் தோள்பட்டை அளவிற்கு நேராக நீட்டவும்.
- இப்போது வலது காலை உயர்த்தி, இடது கையால் கால்விரல்களைத் கீழே குனிந்து தொடவும்.
- கீழே குனியும் பொது மூச்சை வெளிவிடவும்.
- பிறகு மீண்டும் இயல்பான நிலைக்கு வரவும். அதாவது நேராக நிற்கவும்.
- இப்போது இடது காலை மேலே தூக்கி, வலது காலின் கால்விரல்களைத் வலது கைகளால் தொடவும்.
- இந்த உடற்பயிற்சியை இருபுறமும் 30 முறை செய்யவும். இதை மூன்று முறை செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம் : Exercise Tips: உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா? நிபுணர்கள் கருத்து
பக்கவாட்டு வளைவுகள் உடற்பயிற்சி (Standing Side Bend)

இந்த உடற்பயிற்சி பக்க வளைவுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது வயிறு மற்றும் இடுப்பு மற்றும் கால்கள் மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த ஓட்டமும் மேம்படும்.
- இதற்கு முதலில் உங்கள் கால்களை இரண்டு அடி அகலத்திற்கு அகலமாக வைத்து நேராக நிற்கவும்.
- உங்கள் ஒரு கையை மேலே நீட்டவும்.
- பின்னர் உங்கள் வலது கையை மடக்கி உங்கள் இடுப்பில் வைக்கவும்.
- இடது கை மற்றும் உடலை வலது பக்கம் சாய்க்கவும்.
- பின் மற்ற பக்கம் செய்யவும்.
- உடற்பயிற்சியை இருபுறமும் குறைந்தது 20 முறை செய்யவும். இதை 3 செட் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Double Chin: டபுள் சின் உங்க அழகை கெடுக்கிறதா? இந்த 2 பயிற்சிகளை தினமும் செய்யுங்க!
ஜம்பிங் ஜாக் (Jumping Jacks)

இது ஒரு கார்டியோ உடற்பயிற்சி, இது முழு உடல் எடையையும் குறைக்கிறது. இதயம் மற்றும் தசைகளுக்கு இது சிறந்த பயிற்சியாகும். இந்தப் பயிற்சியை தினமும் செய்வதால், மன உறுதியும், மன அழுத்தமும் குறைந்து, நுரையீரல் வலுவடையும்.
- இதற்கு முதலில் கால்களில் சிறிது இடைவெளி விட்டு நேராக நிற்கவும்.
- இரு கைகளையும் மேல்நோக்கி நகர்த்தவும்.
- இப்போது கால்களை ஜம்ப் செய்து அகலமாக வைக்கும் பொது இரண்டு கைகளையும் தலைக்கு மேல தூக்கு கிளாப் செய்யவும்.
- பின் மீண்டும் ஜம்ப் செய்து கால்களை சேர்த்து வைத்து, கைகளை கீழே இறக்கவும்.
- இந்த பயிற்சியை செய்யும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியிடவும்.
- இந்த உடற்பயிற்சியை 30 முறை செய்யவும். இதை மூன்று செட் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Plank Workout: இந்த உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் பிளாங்க் செய்யக்கூடாது… ஏன் தெரியுமா?
பெண்களாகிய நாம் உடல் கொழுப்பைக் குறைக்கும் உடற்பயிற்சியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஏனென்றால், அதிக வேலைகளைச் செய்வது உடற்பயிற்சிக்கு சமம் என்று நினைக்கிறோம். ஆனால், உடல் கொழுப்பை குறைக்க, முறையான உடற்பயிற்சி செய்வது அவசியம். இந்த 3 பயிற்சிகளை செய்வதன் மூலம் 15 நாட்களில் உடல் கொழுப்பை குறைக்கலாம்.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version