Sat Sep 12, 2026 | 12:05 AM IST

Fenugreek Leaves: தொங்கும் தொப்பையை குறைக்க இந்த ஒரு கீரை போதும்!!

How to use fenugreek leaves for weight loss: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சனையாக மாறியுள்ளது. ஆம், உடல் பருமன் மூன்றில் ஒருவரை பாதித்து வருகிறது. இது உங்களை அசிங்கமாக கட்டுவது மட்டுமின்றி உடலில் பல நோய்களையும் உண்டாக்குகிறது. அதாவது, நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.

அதீத உடல் எடையை குறைக்க மக்கள் பல தந்திரங்களை செய்கிறார்கள். ஆனால், அவை நமக்கு எந்த பலனையும் தருவதில்லை. நீங்களும் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், உடல் எடையை குறைக்க மிகவும் ஆரோக்கியமான வழியை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். வெந்தய கீரை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Chia Seeds For Weight Loss: இந்த ஒரு பானத்தை குடியுங்க வயிற்றில் உள்ள கொழுப்பை வழிச்சு எடுத்திடும்!

வெந்தய கீரை உடல் எடையை குறைக்குமா?

வெந்தய கீரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் பற்றி பேசுகையில், இதில் நல்ல அளவு கால்சியம், இரும்பு, புரதம், வைட்டமின் சி மற்றும் மிக முக்கியமாக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடல் எடையை குறைக்க உதவும்.

நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது. செரிமானம் சரியில்லை என்றால் எடையும் பாதிக்கப்படும். மோசமான செரிமானம் காரணமாக வளர்சிதை மாற்றமும் குறைகிறது. அத்தகையவர்களுக்கு ஆற்றல் குறைவாக இருக்கும். தூக்கம் சரியாக இல்லை மற்றும் ஹார்மோன்கள் சமநிலையற்றவை, இவை அனைத்தும் உடல் பருமனை அதிகரிக்க காரணமாகின்றன.

அதே நேரத்தில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. வளர்சிதை மாற்றமும் அதிகமாகும். இதனால் கொழுப்பு எளிதில் எரிகிறது. இது தவிர, நார்ச்சத்து சாப்பிடும் போது, ​​நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை. வயிறு நிரம்பியதாக உணர்கிறீர்கள், இதனால் நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்கிறீர்கள். இந்த காரணிகள் அனைத்தும் எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம் : Okra Water for Weight Loss: எப்பேற்பட்ட தொப்பையையும் குறைக்க உதவும் வெண்டைக்காய் நீர். இப்படி குடிச்சி பாருங்க

வெந்தய கீரையை எப்படி சாப்பிடணும்?

உங்கள் எடை இழப்பு பயணத்தில் நீங்கள் மேத்தி பராத்தா சாப்பிடலாம். ஒரு கப் கோதுமை மாவில் அரை கப் வெந்தய கீரையை கலந்து பிசைந்து, இந்த மாவில் மதியம் அல்லது காலை உணவில் ரொட்டி சுட்டு சாப்பிட்டால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

வெந்தய கீரையை பருப்பு செய்தும் சாப்பிடலாம். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

வெந்தய கீரையை முட்டை சேர்த்து பொரித்தும் சாப்பிடலாம். இது அதிக நன்மைகளை வழங்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Ghee For Weight Gain: உடல் எடை அதிகரிக்க தினமும் எவ்வளவு நெய் சாப்பிடணும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content