How To Use Chia Seeds For Weight Loss: இன்றைய காலத்தில் மூன்றில் ஒருவர் எடை அதிகரிப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் எடையை அதிகரிப்பு பல வகையான நோய்களை வரவழைக்கும் அதே வேளையில், மலச்சிக்கல் எல்லா நேரத்திலும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு சிக்கல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்கள் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்போது, உங்கள் எடையும் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்க வேண்டுமென்றால், உங்கள் உணவில் ஒரு சிறப்பு வகை டிடாக்ஸ் பானத்தை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்களின் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும். உடலை ஆரோக்கியமாக வைக்கும் டிடாக்ஸ் பானம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Detox Drinks For Weight Loss: ஒரே வாரத்தில் உடல் எடை குறைய இந்த டீடாக்ஸ் பானத்தை குடியுங்க!
டிடாக்ஸ் வாட்டர் செய்ய தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு - 2 முதல் 3 துண்டுகள், ஒரு ஸ்பூன் சியா விதைகள், ஸ்ட்ராபெரி - 2 முதல் 4, வெள்ளரி - 2 முதல் 4 துண்டுகள், எலுமிச்சை - 2 துண்டுகளாக வெட்டவும். இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு பாட்டிலில் போட்டு தண்ணீர் நிரப்பி சில மணி நேரம் வைக்கவும். பிறகு அதை உட்கொள்ளவும். இந்த பாட்டிலில் உள்ள பொருட்களை 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
டிடாக்ஸ் வாட்டரின் நன்மைகள்
டிடாக்ஸ் நீரில் உள்ள சியா விதைகள் மற்றும் எலுமிச்சை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உங்கள் செரிமானம் மேம்படும் போது, உங்கள் எடையும் வேகமாக குறையும். சியா விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது. அதே நேரத்தில், உங்கள் எடையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இதில் உள்ளன.
இதில் உள்ள ஆரஞ்சு பழத்தில் குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயில் உள்ள குறைந்த கலோரி மற்றும் ஜீரோ கொழுப்பு உங்கள் எடையை குறைக்க உதவும். ஸ்ட்ராபெர்ரியில் உள்ள நார்ச்சத்து உடலின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் கலோரிகளில் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss: கஷ்டப்படாமல் ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க தினமும் இதை குடியுங்க!
சியா விதைகள் வயிற்றில் நுழைந்தவுடன் ஜெல்லி போல மாறும். இந்த வகை ஜெல் உருவாக்கம் மலத்தை மென்மையாக்கவும், மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்கவும் உதவுகிறது. இந்த காரணிகள் அனைத்தும் எடையைக் குறைக்கவும் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகின்றன.
Pic Courtesy: Freepik