வயிற்றில் கொழுப்பு அதிகரித்தால், எடை குறைத்தாலும் உடல் தோற்றத்தில் மாற்றம் தெரியாது. அதற்கான தீர்வு என்ன? எந்த உணவுகளை சாப்பிட்டால் வயிறு தட்டையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்? இதைப்பற்றி மருத்துவர் ஐஸ்வர்யா செல்வராஜ் இன்ஸ்ட்டாகிராமில் பரிந்துரைத்த Top 5 உணவுகளை இங்கே பார்ப்போம்.
தொப்பையை குறைக்க உதவும் உணவுகள்
லெமன் வாட்டர்
காலை எழுந்தவுடன், வெந்நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கவும். இது உடலில் உள்ள toxins அனைத்தையும் வெளியேற்றும். Water retention குறைந்து, வயிறு தட்டையாகத் தோன்றும். எடை குறைக்கும் பயணத்தில் lemon water முக்கிய பங்கு வகிக்கிறது.
சியா விதைகள்
சியா விதைகளை 10 நிமிடம் ஊறவைத்து, சாலட் அல்லது பானங்களில் சேர்த்து குடிக்கலாம். இதில் உள்ள ஒமேகா 3 அமிலம் மற்றும் நார்ச்சத்து, வயிறு உப்புசத்தை குறைக்க உதவும். இது பசி குறைக்கும் திறனும் உள்ளது. சியா விதை உணவில் சேர்த்தால், வயிற்றுப் புடைப்பைத் தவிர்க்க முடியும்.
வெள்ளரி
வெள்ளரிக்காய், உடலுக்கான Natural Dietary Aid. Detox water-ல் சேர்த்தோ அல்லது சாலட்களில் சேர்த்தோ சாப்பிடலாம். உடலில் உள்ள அதிக நீர் எடை குறையும். எளிதாகக் கிடைக்கும் வெள்ளரிக்காய், தட்டையான வயிறு தரும் budget-friendly food.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள Potassium & Nutrients, நீர்ப்பிடிப்பு குறைவு. நீண்ட நேரம் fuller feeling தரும். இதனால் binge eating பழக்கம் குறையும். சில உடல்நலப் பிரச்சினைகள் (உயர் சர்க்கரை, சிறுநீரக நோய்) உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே சாப்பிட வேண்டும்.
அவகேடோ
Healthy fats நிறைந்த அவகேடோ, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், சருமத்தை பளபளப்பாக்கும். நீண்ட நேரம் பசியை அடக்கி வைக்கும். அவகேடோ, நவீன உணவுப் பழக்கத்தில் “superfood” எனக் கருதப்படுகிறது.
View this post on Instagram
இறுதியாக..
தட்டையான வயிறு பெற வேண்டும் என்றால், உடற்பயிற்சியுடன் சேர்த்து உணவு பழக்கமும் முக்கியம். டாக்டர் ஐஸ்வர்யா செல்வராஜ் பரிந்துரைத்த லெமன் வாட்டர், சியா விதை, வெள்ளரி, வாழைப்பழம், அவகேடோ ஆகிய ஐந்து உணவுகளை தினசரி உணவில் சேர்த்தால் - வயிறு உப்புசம் குறையும், பசி கட்டுப்படும், வயிற்றுக் கொழுப்பு குறையும். ஆனால், ஒவ்வொரு உடல்நிலை பிரச்சனையும் தனித்துவமானது என்பதால், சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
{Disclaimer: இந்தக் கட்டுரை Dr Aishwarya Selvaraj அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் பொது விழிப்புணர்வுக்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நிலை, மருத்துவ ஆலோசனைகள் தேவையானவர்கள் மருத்துவரை நேரடியாக அணுகவும்.}
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 17, 2025 21:35 IST
Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி