Expert

Diet-க்கு சூப்பர் சாய்ஸ்! ஒரு நாளில் இருமுறை இதை சாப்பிட்டேலே போதும்! கிலோ கிலோவா Weight Loss ஆகும்!

porridge benefits for weight loss: தினமும் இரண்டு முறை கூழ் குடிப்பதால் உடல் எடை குறையுமாமே.! அது எப்படி.? கொழுப்பு கரையும் ரகசியம், ஆரோக்கிய நன்மைகள், எடை கட்டுப்பாடு ஆகியவை பற்றி முழு தகவல் இங்கே.
  • SHARE
  • FOLLOW
Diet-க்கு சூப்பர் சாய்ஸ்! ஒரு நாளில் இருமுறை இதை சாப்பிட்டேலே போதும்! கிலோ கிலோவா Weight Loss ஆகும்!


தமிழகத்தில் நூற்றாண்டுகளாக கூழ் என்பது எளிய, சத்தான, ஆரோக்கியமான உணவாக இருந்து வருகிறது. முன்னோர்கள் காலையில் சோளக்கூழ், கேழ்வரகு கூழ், கம்பு கூழ், அல்லது அரிசி கூழ் குடித்து நாளைத் தொடங்கினர். இன்று, “diet food” என்று உலகம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் அதே உணவு, நம்முடைய பாரம்பரிய உணவே.

இரண்டு முறை கூழ் - எடை இழப்பு ரகசியம்.!

ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், காலை மற்றும் இரவு இரண்டு முறை கூழ் குடிக்கும் பழக்கம் உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம்:

  • Low Calories – கூழில் அதிக கலோரி கிடையாது.
  • High Fiber – நீண்ட நேரம் பசி வராமல் தடுக்கிறது.
  • Slow Digestion – உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
  • Fat Burn Support – உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கிறது.

artical  - 2025-08-18T124142.521

எடை இழப்பில் கூழின் பங்கு

  • வயிற்று கொழுப்பு குறைப்பு: கூழ் குடிப்பது metabolism-ஐ அதிகரித்து, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேமிக்காமல் தடுக்கும்.
  • பசி கட்டுப்பாடு: high fiber இருப்பதால் அதிக உணவு சாப்பிடும் பழக்கம் குறைகிறது.
  • சர்க்கரை நோயாளிகளுக்கு உதவி: blood sugar level-ஐ கட்டுப்படுத்தும்.
  • கொழுப்பு சத்து குறைப்பு: கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • செரிமானம் மேம்பாடு: probiotics நிறைந்ததால் குடல் ஆரோக்கியம் நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: எப்பேற்பட்ட கொழுப்பையும் கரைச்சி எடுக்க நைட் தூங்கும் முன் இந்த வாட்டர் ஒரு கப் குடிங்க..

எந்த வகை கூழ் சிறந்தது?

  • கம்பு கூழ் (Pearl Millet Porridge): அதிக இரும்புச்சத்து கொண்டது, ரத்தச்சோகை குறைக்கும்.
  • கேழ்வரகு கூழ் (Finger Millet Porridge): எலும்பு வலிமை அதிகரிக்கும்.
  • சோளக் கூழ் (Sorghum Porridge): எடை குறைப்பதற்கு சிறந்தது.
  • அரிசி கூழ் (Rice Porridge): குடலுக்கு நன்றாக இருந்தாலும், எடை குறைக்க விரும்புவோர் மில்லெட் கூழ் தேர்வு செய்யலாம்.

artical  - 2025-08-18T124329.776

கூழை எப்படிச் சாப்பிட வேண்டும்?

  • காலை: வெறும் வயிற்றில் சற்று புளிக்க வைத்த கூழ் குடிக்கலாம்.
  • இரவு: கனமான உணவு விட, மிதமான அளவு கூழ் குடிப்பது நல்ல தூக்கத்தையும் எடை கட்டுப்பாட்டையும் தரும்.
  • சேர்க்கைகள்: வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு, தாயிர் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.

இதையும் படிங்க: எச்சரிக்கை மக்களே.. உயிரை பறிக்கும் Liquid Diet.! ஜூஸ் மட்டும் போதுமா.?

கூழ் குடிக்கும் போது கவனிக்க வேண்டியவை

  • அதிக அளவு உப்பு அல்லது எண்ணெய் சேர்க்கக்கூடாது.
  • வயிறு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரை கேட்டுப் பருக வேண்டும்.
  • தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

artical  - 2025-08-18T124643.374

நிபுணர் கருத்து

உணவியல் நிபுணர்கள் கூறுகையில், “தினமும் இரண்டு முறை கூழ் குடிப்பது உடல் எடை குறைக்க மிகச் சிறந்த இயற்கை வழி. இதனால் வயிற்றுப் பகுதி சதை குறையும், கொழுப்பு எரியும், உடல் ஆரோக்கியம் மேம்படும்” என்றார்.

இறுதிச் சொல்..

“Weight loss” என்ற வார்த்தையை கேட்டு விலை உயர்ந்த supplement-களில் பணம் செலவழிப்பதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் கூழ் குடிக்கும் பழக்கத்தை மீண்டும் வாழ்க்கையில் கொண்டு வாருங்கள். தினமும் இரண்டு முறை கூழ் குடித்தால், எடை குறையும்.. உடல் ஆரோக்கியமும் உயரும்!

 

 

Read Next

பாதாமை ஊறவைத்து இப்படி மட்டும் சாப்பிட்டு பாருங்க.. உங்க ஸ்கின் அப்படியே பளிச்சினு மின்னும்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்