கீழடி அகழ்வாய்வுகளிலிருந்தும், நம் முன்னோர்கள் சொல்லும் பழமொழிகளிலிருந்தும், கூழ் என்பது தமிழனின் வாழ்வின் ஒரு அடிப்படை உணவாக இருந்தது என்பதை அறியலாம். வெறும் வறுமையின் அடையாளமல்ல, உண்மையில் அது ஆரோக்கியத்தின் தாய்!
நம் முன்னோர்கள் காலநிலை, உடல்நிலை, வேலைச்சுமை என அனைத்தையும் பொருத்து கூழை தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்கள். அதில் முக்கியமான இரு வகை கூழ்கள் தான் கம்மன் கூழ் மற்றும் கேப்பை கூழ். இரண்டுமே ஆடி மாதத்தில் பரிமாறப்படுவது ஏன்? ஆரோக்கியத்தில் எது சிறந்தது? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
கம்மன் கூழ் - சிறப்புகள் மற்றும் உடல்நல நன்மைகள்
கம்பு தினை மற்றும் ழுங்கல் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் கூழ் தான் கம்மன் கூழ். இது வெகு நேரம் காய்ச்சி, கமகமக்கும் மணத்துடன் தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்திற்கு உதவும். மேலும் இது நீண்ட நேரம் உங்களை முழுமையாக உணர வைக்கும். குறிப்பாக, இது உடல் வெப்பத்தை குறைக்கும். சோடியம், கார்போஹைட்ரேட், பைபர், B6 ஊட்டச்சத்துக்கள் கம்மன் கூழில் உள்ளன.
கேப்பை கூழ் - நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்
கேழ்வரகு.. அதாவது ராகியை புளிக்கவைத்து செய்யப்படும் கூழ் தான் கேப்பை கூழ். இது சிறிது கடுமையான சுவையை கொண்டதாயினும், உடலுக்கு பெரும் நன்மைகளை தரும். இது உடலை சிறப்பாக டிட்டாக்ஸ் செய்யும். முக்கியமாக இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும். குறிப்பாக, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். கேப்பை கூழ் ஒரு சக்தி தரும் சூப்பர்ஃபுட் என இந்திய ஆயுர்வேத முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோடையில் ராகி சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும்.?
ஆடி மாதம் - கூழுக்கும், காலநிலைக்கும் உள்ள தொடர்பு
ஆடி மாதம் என்பது தெற்காசியக் காலநிலையால் நிர்ணயிக்கப்படும் ஒரு முக்கிய கட்டம். மிகுந்த வெப்பம் முடிந்து, மழை தொடங்கும் சுழற்சியாக இது அமைகிறது. பழங்காலத்திலேயே தோல் அழகு, உடல் ஆரோக்கியம், குழந்தை பராமரிப்பு போன்ற அனைத்திற்கும் கூழ் பரிந்துரை செய்யப்பட்டு வந்துள்ளது. கூழுடன் மோர், வெங்காயம், பச்சை மிளகாய் வைத்து சாப்பிடலாம்.
ஆடி மாதத்தில் வேலையின் சுமையை குறைய வைக்கும் ‘ஊட்டச்சத்து’ உணவாகவே கூழை பரிமாறினர். குளிர்ச்சியும், ஜீரண வசதியும் உள்ளதால், சோர்வற்ற காலை உணவாக பரிமாறப்பட்டது. விழாக்கள் மற்றும் பூஜைகளில் கூழ் தரும் வழக்கம் தர்மத்தின் அடையாளமாக.
சமையல் முறையில் வேறுபாடுகள் - எது எப்படிச் செய்ய வேண்டும்?
கம்மன் கூழ் செய்வது எப்படி?
* கம்பு மற்றும் புழுங்கல் அரிசியை இரவில் ஊற வைத்து காலை நேரத்தில் கொதிக்க விட வேண்டும்.
* மோர், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்தால் ready!
கேப்பை கூழ் செய்வது எப்படி?
* ராகி தானியங்களை புளிக்க விட்டு, பச்சையாக அரைத்து வடித்து வைத்தபின் அது புளிக்க விட வேண்டும்.
* பிறகு மூடிப் போட்டு கொதிக்க வைத்து தரலாம்.
எது சிறந்தது? எப்போது எதைத் தேர்வு செய்யலாம்?
இரண்டும் உண்மையில் தமிழனின் மரபும், அறிவும் கலந்த உணவுகள். கம்மன் கூழ் என்பது வெப்பக் காலத்திற்கும், பெரும்பாலானோருக்கும் ஏற்றது. கேப்பை கூழ் என்பது நோயாளிகள், அழுத்தத்தில் இருப்பவர்கள், போஷாக்கற்ற குழந்தைகள், மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்தது. தயாரிப்பு சுலபம் — செலவு குறைவானது — உடல்நலம் சிறந்தது.