ஆடி மாதத்தில் கணவன், மனைவியை பிரிப்பது ஏன் தெரியுமா? இதுதான் உண்மை!

ஆடி மாதத்தில் கணவன், மனைவி ஒன்றாக இருக்கக் கூடாது என பெரியோர்கள் கூறி தனித்தனியாக பிரித்து வைப்பது வழக்கம். இதற்கான அறிவியல் பூர்வமாக சில காரணங்கள் கூறப்படுகிறது.
  • SHARE
  • FOLLOW
ஆடி மாதத்தில் கணவன், மனைவியை பிரிப்பது ஏன் தெரியுமா? இதுதான் உண்மை!


ஆடி மாதத்தில் கணவன், மனைவி ஒன்றாக இருக்கக் கூடாது என பிரித்து வைக்கப்படுவது உண்டு. குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதிகளை பெரியோர்கள் பிரித்து வைப்பார்கள். இதுதொடர்பாக பல வதந்திகள் பரவுகிறது, மேலும் இதுகுறித்து மீம்களும் பல தகவல்களோடு சமூகவலைதளங்களில் பரவுகிறது. ஆடி மாதத்தில் கணவன் மனைவியை பிரித்து வைக்க காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

ஆடி மாதத்தில் நமது தெருக்களில் உள்ள கோவில்களில் தொடங்கி பல கோவில்களில் திருவிழா நடக்கும். இந்த மாதம் முழுமையாக கடவுளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் தான் உழவு தொழில் தொடங்கும் மாதமாக கூறப்படுகிறது, எனவே இந்த காலக்கட்டத்தில் விஷேசம் வைத்தால் உணவு பொருட்கள் விலை அதிகமாகவும் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தான் தமிழகம் முழுவதும் ஒருமித்து ஆடி மாதத்தில் விஷேசம் வைப்பது தவிர்க்கப்படுகிறது.

why husband and wife separate in the month of aadi

ஆடி மாதத்தில் தம்பதிகள் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது?

ஆடி மாதத்தில் தம்பதிகள் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது என்பது முக்கிய காரணம் இருக்கிறது. ஆடி மாதத்தில் தம்பதிகள் ஒன்றாக இருந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும், சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் என்னவென்று கேள்வி வரலாம், சித்திரை மாதம் என்பது வெயில் அதிகமாக இருக்கும் மாதமாகும். இந்த காலக்கட்டத்தில் பிரசவம் நடந்தால் தாய், சேய் இருவரும் சிரமத்தை உணருவார்கள் அதான் இப்படி கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Silent Heart Attack: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் வந்தா மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தம்!

கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் படும் சிரமம்

கோடை காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் சிறப்பு கவனம் தேவை. அந்த நாட்களில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், அந்த நபர் வெப்ப பக்கவாதம் அல்லது நீரிழப்பு போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிப் பேசுகையில், அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது. இது நடந்தால், அது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

aadi-month-special

உதாரணமாக, இரத்த அழுத்தம் குறையலாம், இதயத் துடிப்பு அதிகரிக்கலாம், தலைச்சுற்றல் ஏற்படலாம் மற்றும் சில கடுமையான சந்தர்ப்பங்களில், மயக்கம் கூட ஏற்படலாம். இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்க, கர்ப்பிணிப் பெண்கள் கோடையில் தங்களை மற்றும் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தை மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

  • நீரேற்றம் தொடர்பான பிரச்சனைகள்
  • உணவு விஷம் ஏற்பட வாய்ப்பு அதிகம்
  • உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் பாதிப்பு வரலாம்
  • முடிந்தவரை குளிர்ந்த இடத்தில் நேரத்தை செலவிடுங்கள்.
  • வெக்கை காரணமாக நிம்மதியாக ஓய்வு கிடைக்காமல் போகும்.

image source: Meta

Read Next

Silent Heart Attack: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் வந்தா மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தம்!

Disclaimer